மூழ்குவோம் இயற்கையின் ஒப்பற்ற அழகிலே

காண வேண்டிய அற்புதங்கள் பல அழகுலகிலே நிலைத்திருக்க, அவற்றையெல்லாம் காணாமல், காணக் கூடாத காட்சியை எல்லாம் அழகென்று காண்கிறோமென்றால் அதன் காரணமாய் மனதிலுள்ள எண்ணங்களே அமைகிறதென்பதை அறியவே மனதின் எண்ணங்களை அழகாய் வடிவமைத்திட வேண்டிய அவசியமானதை உணர்ந்து கொண்டது இந்த அன்பு கொண்ட இருதயம்..

அழகிய காட்சி கண்ணெதிரே காணக் கிடைத்தாலும்,
மனதிலே ஏக்கமோ, சோகமோ நிறைந்திருந்தால் அழகிய காட்சியும் அழகற்றதாய் தோன்றவே வெறுமையும், சோகமும் இருதயமானதை ஆட்கொள்ளவே,
சோர்ந்து போய் அமர்ந்திருப்பதால் சோம்பேறியாகி ஆக்கமெதையும் ஆற்றாமல், ஆனந்த வாழ்வுதனை அடுத்தவர் பறித்ததாய் எண்ணி சூளுரைத்து, அன்பென்னும் அமிர்தம் நிறைய வேண்டிய மனதில் விரக்தியும், கோபமும் குடிகொள்ள, பிறரை வீழ்த்தும் எண்ணங்களின் ஆதிக்கம் அதிகமாகி,
போலியான அதிகாரமும், உரிமையும் கொண்டு,
அழிவுப்பாதையை நோக்கி தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டு மேலும் மேலும் அநீதியிழைக்கத் துணிகிறோம் என்பதே உண்மை..

இயற்கையின் அழகியலில் மூழ்கும் போதே மனிதன் தனது எண்ணங்களை நல்வழிப்படுத்தி உலகின் மீது உண்மையான அன்பைத் தனது இருதயத்தில் நிரப்புவது சாத்தியமென்பதால் மூழ்குவோம், இயற்கையின் ஒப்பற்ற அழகிலே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Apr-17, 4:36 pm)
பார்வை : 312

மேலே