பனிக்காலம்

ஊசி கொண்டலையும் பனி
உடலைக் குத்த நினைக்கிறது
போர்த்திக் கொண்டலையும் உடல்
பனிக்கு மயங்க மறுக்கிறது
மெல்லத் தெரியும் சூரியஒளி
சூட்டை மறந்து குளிர்கிறது
பிள்ளை களுக்கெல்லாம் பிடித்ததுதான்
சுகமாய் உறக்கம்தரும் பனிக்காலம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-17, 11:06 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 463

மேலே