இன்றைய விவசாயம்

இன்றைய விவசாயம் சாயம் போய்விட்டது
மாயமாகி விட்டது
பெரிய முதலைகளின் கைகளில்
மாட்டிக்கொண்டுவிட்டது
நீர் தர மறந்த மேகமும்
இருக்கும் நீரைக்கூட பகிர மறுக்கும் மனிதமும் சேர்ந்து
விவசாயத்தை கொன்று போட்டு விட்டது..
அன்று வீட்டுக்கு வீடு விவசாயி இருந்தான்
விவசாயம் வாழ்ந்தது..
இன்றும் விவசாயத்தின் கண்ணீர்
கவிதைகளில் மட்டுமே வாழ்கிறது..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-17, 11:12 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : indraiya vivasaayam
பார்வை : 584

மேலே