வானம்

வானம்..

பகல் முழுதும் வெளுத்திருக்கும்
மேகநண்பன் கருமைகொண்டால்
கண்ணை விட்டு மறைந்திருக்கும்..

இரவில் பல நகைகள் இட்டு
நிலவுப்பெண்ணுடன்
போட்டியிடும்..

விடியல் சூரியன் நெருங்கி வர‌
பழைய படி
தன் நிலை அடையும்

குழந்தைகளுக்கும் பிடிக்கும்
கவிஞர்களுக்கும் பிடிக்கும்
வானமொரு மடிக்கவியலா போர்வை..

அந்தரத்தில் தலைகீழாய்
அயர்ந்துறங்கும்
அலைகளில்லா நீலக்கடல். 

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-17, 11:50 pm)
Tanglish : vaanam
பார்வை : 3152

மேலே