சின்னச்சிறகு விரித்துச் சிட்டுக்குருவி

சின்னச்சிறகு விரித்துச் சிட்டுக்குருவி பறக்குது சிவந்த வானில்
மின்னல்ஒளிக் கதிர் விரித்து அந்தவானில் எழுகிறான் உதயன்
வண்ண மலர்கள் இதழ்கள் விரித்து சிரித்து ஆடுது
தென்றல் வந்து உச்சிமுகர்ந்து முத்தமிட்டு வாழ்த்துப் பாடுது !
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-----கவின் சாரலன்