இறந்துபோன இலைகள்

இறந்துபோன இலைகள்

மனிதர்களை போலல்ல
மரங்களின் புறங்களில்
விரவிக்கிடக்கும்
இறந்துபோன இலைகள்

உதிர்ந்த பின்னும்
மரண வாடையின்றி...

எங்கோ
நீரில் தத்தளிக்கும்
சிற்றெறும்பின்
உயிர் காக்கும்
சிறு படகாய்...

மக்கி மண்ணில்
புதையுண்டாலும்
உரமாய்
பயிர்களின் வளமாய்

தொண்ணையாய் தைத்ததால்
ஒரு வேளை உணவுக்காய்
குறைந்தபட்சம்
குவித்து வைத்து
தீயிட்டால்
குளிர்காயவாய்...

பிணமென்று சொல்வதைப்போல்
சருகென்று எப்படிச் சொல்வது
இறந்தாலும் வாழும் இலைகளை
இறந்தாலும் மரம்
மரம் தானே.

நிலாரவி...

எழுதியவர் : நிலாரவி (22-Apr-17, 9:50 am)
Tanglish : iranthupona ilaikal
பார்வை : 302

மேலே