கோடை மழை

"கண்களுக்குள் விழாக்காலம்
கோடைக்காலம்"
ஆம் கோடை வந்துவிட்டால் போதும்,
ஒரே கொண்டாட்டம் தான்.
இளநீர்,குளிர்பானம்,பழங்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
இந்த கொண்டாட்டத்தின் கடவுளே கதிரவன் தான்.
வெப்ப வெயில் தீயாக தாக்கும்.
தேகம் மழையை கேட்கும்.
மழையும் தினமும் பொழியும்
வான மழை அல்ல!
வியர்வை மழை!
சூடு பட்ட மேனியில் சொட்டு சொட்டாய்
வியர்வை மழையாய் பொழியும்,
கண் தான் மின்னல் ஒளி,
கைத்தட்டல்தான் இடிமுழக்கம்,
வியர்வையே மழைத்துளிகள்,
இதுவே எங்களின் மழைக்காலம்
"கோடை மழைக்காலம்"

எழுதியவர் : பாலா (22-Apr-17, 11:47 am)
சேர்த்தது : Bala R
Tanglish : kodai mazhai
பார்வை : 132

மேலே