எனக்காய் கொஞ்சம் வேணும்
தென்றல் எனை தீண்டல் கொள்ள
முன்மழை சாரல் தூற வேணும்
தென்னங்கீற்று படுக்கை விரித்து
இமைக்கா இரவு ஒன்று வேணும்
நதியோர வெளியில் ஆசனம் கொய்து
நெடுங்கனவு நானாய் பேச வேணும்
முடிவுறா வனத்தின் மூலை தேடி
மூங்கில் வாசம் தின்ன வேணும்
நித்திரை இல்லா இரவு தன்னில்
நல்லோர் கவியில் அழுதல் வேணும்
தவறிவிழும் அருவி தன்னை யான்
தாங்கி தரையில் தவழ்த்த வேணும்
நிலவு உதிக்கும் முன்நொடி வரைக்கும்
உன்னோடு நான் உலவுதல் வேணும்
உதித்த நிலவு உதிர்த்த பின்னும் நீ
உறவ நினையா உறவாய் வேணும்
$வினோ...