மழையே

மழையே
தரை தழுவித் தூங்கும்
மண்ணைத் தட்டி எழுப்பி
காற்றதன் முதுகேற்றி
என் நாசியோரம்
சேதி சொன்னாய்
நீ வருவாய் என......

நெடுநேரமாய்
வாயிலில் நான்
வந்தாய்
செல்லச் சிணுங்கலாய்
சில தூரலிட்டு
உன் ஈரப்பார்வை பட்டு
மெய்சிலிர்க்கும் கணங்கள்
மனம் விரும்பி ஏற்கும் வரங்கள்.....

அன்றொரு நாள்
வலியவே நீயாய்
உன்னில் எனை புதைத்து
ஒட்டு மொத்தமாய்
இழந்தேன் என்னை
நீ அடம் பிடித்து அரற்றியதால்....

வாயில் கோலத்தை
அழித்துவிட்டு
என் சன்னலோரப் பார்வை
உன்மீது படும் வரை
சோ.....வென கூவி
அழைக்கிறாயே!
வெட்கம் ஏதும் கொள்ளாமல்.......

நின் தீண்டுதலில்
தெறிக்கிறதேஇசைத்துளி
எட்டாம் சுரமாய்
வா கண்மணி
நீ இன்றி நான் இல்லை.......

சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (19-Apr-17, 8:10 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : mazhaiyae
பார்வை : 144

மேலே