பேருந்தில் ஒரு பயணம்
உட்கார்ந்து இருந்தாலும் மரங்கள் பின்னால் ஓடும் மாயம்,
ஊர்கதைகள் பேசும் சக பயணிகளின் உற்சாகம்,
ஒவ்வொரு நிருத்தத்திலும் நடத்துனர் விசிலின் ஓங்காரம்,
சில்லரைக்காக சிறிய சண்டைகளிடும் சகாக்கள்,
மின்விசிறி இல்லாமலே மின்னல் வேகத்தில் நம்மை மீளும் காற்று,
சிலமணி நேரம் தங்கும் சிறிய வாடகை வீடு,
சிறிய இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளிடம் அமரும் சமத்துவம்,
பார்த்து பரவசமடைய பல்வேறு காட்சிகள்,
பேருந்தில் ஒரு பயணம்,
அனுபவிக்க வேண்டிய அற்புதம்.

