உன் பிரிவின் வலி நீ உணர்வாயா 555
அன்பே...
நீ என்னை பிரிந்து சென்றபோதுதான்
நான் உணர்ந்து கொண்டேன்...
நீ விடைபெற மௌனித்த
அந்த சில நிமிடங்கள்...
நின்றதடி
என் இதயம்...
இதயம் வாங்கிய வலிக்கு
கண்கள் தத்தளிக்கிறது கண்ணீரில்...
தாயை பிரிந்து வாழும்
மழலைக்குத்தான் தெரியும் அருமை...
என்னை பிரிந்த உனக்கு
ஒருநாள் தெரியும்...
என் காதலின் ஆழம்
உன் கண்களில் ஈரமாக...
நீ எப்போது என்னுடன்
சண்டைபோட்டாலும்...
என் அருகில் இருப்பாய்
இடைவெளி விட்டு...
இதயம் வலிக்கிறது நீ
என்னருகில் இல்லை...
பிரிவு மட்டும்
நிரந்தரம் நமக்கு...
காத்திருப்பது
சுகம்தான் காதலில்...
நீ எப்போதும் வரமாட்டாய்
என்று தெரிந்தும்...
நான் காத்திருக்கிறேன்
ஏனோ உனக்காக.....