மழை
இயற்கையின் கொடை நீ
கைமாறு கருதா வள்ளல் நீ
விண்ணிலிருந்து வரும் வசந்தம் நீ
பொதுவுடமைவாதி நீ
மண்ணைக் குளிரச் செய்யும் குளிர்பதனி நீ
ஆறும் நீ கடலும் நீ
சிறுவரையும் மகிழ்விக்கும் மழை நீ
மக்களின் தாகம் தீர்க்கும் மழை நீ
மழையில்லையேல் பயிரேது
பயிரில்லையில் உணவேது
உணவில்லையில் உலக வாழ்வேது
வாடிய மனம் களிக்க
மண்ணுலகு எலாம் தழைக்க
வேண்டி நிற்கிறோம் இயற்கை தாயே
கருணை மழை புரிந்து வாழ்விப்பாயே