கண்ணீரும் நாங்களும் ஓர் ஜாதி
பசியினால் வாடுகிறோம்
பட்டினியால் வேகின்றோம்
உணவளிக்க யாருமில்லை
உதவுவோர்கள் எவருமில்லை
அணிவதற்கு எங்களுக்கு
ஆடைகள் மிச்சமில்லை
சோகத்தில் பங்குகொள்ள
சொந்தங்கள் யாருமில்லை
கனிவாகப் பேசுதற்கும்
கண்ணீரைத் துடைப்பதற்கும்
வருவோர்கள் யாருமியில்லை
மகிழ்வைநாம் கண்டதில்லை
வசந்தந்தான் வீசிடுமா
வறுமைநிலை அகன்றிடுமா
இனிமையான வாழ்வொன்றை
எம்மக்கள் பெற்றிடுமா
வானமே கூரையாக
வருத்தங்கள் கோர்வையாக
பனித்த கண்களாய்
பாதையிலே எம் வாழ்வு
ஆக்கம்
அஷ்ரப் அலி