தாய்மை- நாகூர் லத்தீப்

உடலோடு
ஒட்டிய உணர்வு
உயிரை
சுமக்கிறது
தாய்மை....!!!
மரணம்
கண்முன்னே
திரையிட்டு
காட்டப்படும்
நிகழ்வு பிரசவம்...!!!
குழந்தையின்
சிரிப்பினிலே
ஆனந்தம்
காண்பவள் யார்....???
தாய்மை
பாசத்தின் மறுமுகம்
குழந்தை
பாசத்தின்
அடையாளம்...!!!
பெற்றவள்
பெருமைக்குரியவள்
அவளே அம்மாவாம்
மறுபெயர்
தெய்வமாம்....!!!