அன்பின் சக்தி

இருதயங்களை வியாபித்த அன்பே, உலகை வியாபிக்கிறாய்,
பேரலைகளால் நிறைந்த ஆழியாய்...

அன்பே உன்னால் காலச்சக்கரம் சுழல, கொடுமைகளெல்லாம் ஒழிய, உன் சக்தியால் மாற்றங்களை விளைவிக்கிறாய் அனுதினமும்...

முழுப்பிரபஞ்சமும் தானே என்ற தன்னுணர்வைத் தரவல்ல அன்பே,
உன்னில் அகப்பட்ட மனம் சிறு செடியைப் பிடுங்கவே தயக்கம் கொள்ளுவதால், அது பிற உயிர்களுக்குத் தீங்கினை ஏற்படுத்தாது, என்றும் சிந்தனையில் அன்பே உன்னால் நிறைகிறது சுவாசக்காற்றாய்...

தூய தங்கமாய் ஜொலிக்கிறது அன்பு...
தூய தங்கம் புழக்கத்திற்கு உதவாது என அதனோடு செப்பு கலப்பதை போல்,
அழுக்காறு, பேராசை, என்ற பல தப்புகளைக் கலக்கும் மனிதனால் தூய தங்கம் தன் தூய்மையை இழந்து தன் பொலிவை இழப்பதைப் போல தூய தங்கமாகிய அன்பு போலிவை இழக்கிறது என்றாலும் அன்பு மீண்டும் தன் பொலிவை அடைகிறது நற்சிந்தனையாலே....

சமத்துவத்தை நல்கி, சாதி, மதங்கள் என்ற வேறுபாடுகளை எல்லாம் அழித்து, உலகை நிலைக்கச் செய்கிறாய் அன்பே...

உன்னால் யாவும் தனது உண்மை நிலையை அடைகின்றன அன்பே...

ஏற்க மறுக்கும் இருதயங்களில் எல்லாம் அன்பே நீ புகுந்து ஆதிக்கம் செய்து மாற்றத்தைச் சம்பவிக்கிறாய், நிரந்தர உண்மையை உலகறிய....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Apr-17, 8:13 pm)
Tanglish : anbin sakthi
பார்வை : 916

மேலே