மண்ணின் விசுவாசி - இன்றைய நிலை

நன்செயும் புன்செயும்
பாென்செயும் என
வங்கிகளில் வைத்த கைநாட்டுகளால்
வாங்கிய நாேட்டுகளைத்
தாங்கிய நிலம்..
தூங்கி எழ மறுத்த மழை..
காய்ந்த பயிர்..
மங்கிய மனம்..
மண்ணையே சுவாசிக்கும்
மண்ணின் விசுவாசி.
விவசாயமும் இல்லாமல்
விவசாயி எனும்
விலாசமிழந்து
விலா எலும்பம் தேய்ந்து
முதுகெலும்பும் தாேய்ந்து...

மருதம் பாலையாக..
கதரும் நெஞ்சம் சூலையாக..
உதிரம் சீறும் காளையாக..
கரம் காெஞ்சமும் நீட்டாது
உதரும் சர்க்கார்.

வறட்சி நிவாரணத்திற்காகப்
புறட்சியாகத்
தன்மானம் இழந்து
அரைநிர்வாணமும் துறந்து
முழுநிர்வாணமாய்ப்
பரிமாணமெடுத்து
பரிவாரத்தாேடு
பல பாேராட்டங்கள்.

சர்க்கார் ஓர் நாளைக்கு மட்டும்
உடுத்தும் உடைக்கான செலவு
பல இலட்சங்கள்.
விவசாயி உடுத்தும் உடையையும்
துச்சமாக எண்ணி ஓராண்டில்
வாங்கிய சில ஆயிரங்களை
அடைக்கவும் வழியின்றி தம்
மூச்சினையே அடைக்கும் அவலம்.

அட்சயபாத்திரமாய் இருந்த நம் நாடு
பிட்சைபாத்திரமேந்தி..
ஜந்தர் மந்தரில்..

அரசியல் கட்சிகள்
காட்சிக்காக மட்டும் களத்திற்கு
சுற்றுலாவாக வரும் உலா..

விவசாய இந்தியா
எண்ணியல் இந்தியாவாக
பரிணாமம்!
அதில் ஆப்பிளைப் பயிர் செய்யலாம்.
அதை உண்ண முடியுமா ?
வாட்ஸ்ஆப்பில் நனையலாம்.
அது மழையாக முடியுமா ?
ஃபேஸ்புக்காேடு உறவாடலம்.
அது வயலாக முடியுமா ?

பல காேடிகள் மாேசடி செய்யும்
தாெழிலதிபருக்கு
சாமீன் திறக்கிறது.
தெருக்காேடியில் நின்று பாேராடும்
விவசாயிக்கு
சாவுமணி தான் பிறக்கிறது.

நம் நாட்டு அம்பானிகளுக்கெல்லாம்
கடன் தள்ளுபடி.
நம் விவசாயிகளுக்கு
உயிர் கூட தள்ளுபடியில்லை.

இந்நிலை நீண்டு..
பாெய்க்கும் மழையால்
மாெய்க்கும் வறட்சியும்
காவிரியும் வர மறுத்து..
வீராணமும் வரண்டு..
முல்லைப்பெரியாரும் சுவரெழுப்பி
நிற்க..
வெடிப்புற்ற தமிழ் மண்ணில்
பல இலட்சம் எலும்புக்கூடுகள்
புதையுண்டு
அடுத்த சாேமாலியாவாக
அவதாரமெடுத்து நம்
வாழ்வாதாரமே அழிந்து
சரித்திரத்திலிருந்தே தமிழகம்
தாெலையும் நாள் வெகு
தாெலைவில் இல்லை.

நம் தமிழினமே !
பாெங்கி எழுவாேம் !
மீண்டுமாேர்
நீண்ட மெரினாவில்
எழுச்சியைத் தூண்டுவாேம்..
விவசாயத்தையும்
விவசாயியையும்
நம் மண்ணையும் காப்பாேம்.
விவசாய இந்தியாவை
மீட்டெடுப்பாேம் !

எழுதியவர் : சரண்யா சுப்பிரமணியன் (26-Apr-17, 10:14 pm)
பார்வை : 1015

மேலே