அன்னை
பத்து குழந்தைகள் பெற்றாலும்
அத்தனை மீதும் மாறா அன்பு செலுத்துவாள்
அவள்தான் அன்னை -அந்த பத்தில்
வளர்ந்து ஆளானப்பின் எத்தனை
அன்னைக்கு அன்பு செலுத்தும் யாரறிவார்
அன்னை அவள் அதைப் பற்றி
சிந்திப்பதும் இல்லை கவலைகொள்வதும் இல்லை
அவளுக்கு தெரிந்ததெல்லாம்
அன்பு செலுத்தல் ஒன்றே
எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல்
அன்னை அவள் தியாகி ,நானறிந்த தெய்வம்

