கண்ணகிகள்
கண்ணகிகள்
பட்டுமல்லி பூச்சரத்தில்
வெட்டுமுளி பாச்சரத்தில்
தொட்டயிடை ராகம்பாட
துடித்தக்காமம் வேகம்போட
வினைததும்பும் விரலுக்காக
வீங்கிய மார்பும் மார்பழுந்தும்
விரலுக்காக சூம்பிய மோதிரமும்!
கற்றதுவும் கேட்டதுவும்
காணொளியில் பார்த்ததுவும்
கடைவிழியின் கண்ணீரில்
காமரசம் மேவுவதும்,
விட்டகன்ற கட்டிலிலே வினைமுடித்த
அறிகுறியாய் சொட்டிச்சென்ற
துளிகளோடு தொட்டில்
கட்ட வெள்ளைச்சீலை….!
சுத்தம்செய்த படுக்கையறை
சுழற்றியெறிந்த மடித்தவுறை
கப்பமாய் சிலநூறு ரூபாய்
நுட்பமாய் ஒரு இறுதிமுத்தம்
பட்டென்று தீர்ந்துபோன
பள்ளியறையின் வாசத்திலே
சட்டென்று நுழைந்துவிட்ட
சங்கடமில்லா வாடிக்கையாளன்!
தொட்டதெல்லாம் துலங்குமென்று
இட்டதிலகம் அழிந்ததென்று
வாடியிருக்க நேரமில்லை,
பட்டதெல்லாம் போதுமென்று
பாதியோடு மீண்டுவந்தால்
கற்றவுலகின் கண்களுக்கு நாங்கள்
கடுகளவும் பெண்களில்லை!
குற்றமென்ற பாவம்செய்து
குலவிநின்று யாகம்செய்து
பட்டறிந்த படிப்பறிவாய்
பாடம்சொன்னது பள்ளியறை
கற்றுக்கொண்ட கலைஞர்களாய்
விற்றுசேர்த்தோம் பொன்நகைகள்
ஆமாம் நாங்கள்
கற்பிழந்த கண்ணகிகள்………!
-பிரகாஷ்