மர்மத்தின் பக்கம்- தொடர்கதை - பாகம் 5

அந்தக் குகையில், கண்ணிற்கெட்டியவரை ஒன்றும் தெரியவில்லை.
திடீரென ஒரு ஒளி!
அது ஒரு மாய விளக்கிலிருந்து வந்தது. அதன் மூலம் பார்த்தால், அந்தக் குகையில் வைக்கோலும், வில்- அம்பும், 'ஹக்கூ' என்ற தன் எதிரியின் பெயர் எழுதப்பட்ட ஒரு பெட்டியும் இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்ட சூனியக்காரி, அங்கிருந்து வெளியேற நினைத்தாள்.

அக்குகையின் வாயிலில் ஒரு ஆறு. அதில் பல முதலைகள் அலைந்து கொண்டிருந்தன. அவற்றை வில் அம்பைக் கொண்டு வீழ்த்தினாள் சூனியக்காரி. உடனே, வௌவால்கள் அவளைத் தாக்க வந்தன. அப்போது அவள் தன் மந்திரத்தால் அந்த வைக்கோலை எறித்துவிட்டு, அவள் ஒளிந்துகொண்டாள். அவ்வழியே வந்த மாய வௌவால்கள், வெப்பம் தாங்க முடியாமல் எறிந்து சாம்பலாயின.

திக்கற்று திகைத்த சூனியக்காரிக்கு, 'ஹக்கூ' என்று எழுதப்பட்டிருந்த பெட்டியைத் திரப்பதைத் தவிற வேறு வழி தெரியவில்லை. அதைத் திறந்தாள்.

பகீகீகீகீகீகீர்ர்ர்ர்ர்ர்!

அதில், ஒரு கிழியும் நிலையில் இருந்த ஒரு காகிதத்தில், செந்நிறப் புள்ளியை மத்தியில் கொண்ட அந்த விசிலின் படம் இருந்தது.

அதைக்கண்டு திகைத்த சூனியக்காரி, மீண்டும் திரும்பி அந்த மாயப்பெட்டிக்குள் செல்ல முடிவெடுத்தாள்.

வேறு வழியின்றி அவள் அந்த ஆற்றில் குதித்தாள். சிறிது நேரத்தில் மூழ்கிவிட்ட அவளை, அந்த ஆற்று நீர், ஓர் கரையில் கொண்டு சேர்த்தது.
அவ்வாற்றங்கரையில், மாயாஜாலக் கடவுளின் கோவில் இருந்தது. அப்போதுதான், அவள் தியானத்திலிருந்தபோது சொன்னது, அவள் நினைவுக்கு வந்தது.

மாயகடவுள்: சூனியக்காரியே! நீ உண்மையானவளாக இருந்தால்; உன் 18 நூற்றாண்டுகால தவம் உண்மையானதாக இருக்குமானால், அந்த ஹக்கூவின் அழிவு நாள் வரும் பொழுது, நீ என்னை சந்திக்கும் நிலமை வரும். அந்நாளை எண்ணிக்காத்திரு!!!!!

"அந்தநாள் இன்று வந்துவிட்டது!" என்றவாறு மகிழ்ந்த சூனியக்காரி, கோவிலுக்குள் சென்றாள்.

மாயகடவுள்: வா சூனியக்காரி! நீ உண்மையானவள் தான். உன் தவம் உண்மையானது தான்! நீ எதிர்பார்த்த நாள் இன்று வந்துவிட்டது. எனிலும், நீ செய்யமறந்த ஒரு விஷயம் உள்ளது. அதை நீ நன்றாக அறிவாய்!

சூனியக்காரி: ஆம் ஐயா! அந்த விசில்!

மாயகடவுள்: விரைவாகச் செல் சூனியக்காரியே! இன்னும் 4 மணி நேரத்தில் நீ அவனைக் கொல்லவில்லை எனில், நீ மீண்டும் ஓர் சாபத்திற்கு ஆளாகி, 50 நூற்றாண்டுகள் அப்பெட்டிக்குள் தவம் இருக்க நேரிடும். அதுவும், முன் போல் சுலபமல்ல. நீ மூச்சுவிடாமல் தவமிருக்க வேண்டும். புரிகிறதா!!!!!!!!!!!

சூனியக்காரி: என்ன???????

4 மணி நேரமா (அ) 50 நூற்றாண்டுகளா??
அடுத்த Climax பாகத்தில் முடிவு செய்வோம்............

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (5-May-17, 8:16 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 248

மேலே