நீயிருந்தால்

என் கவிதைகள்
அனைத்தும்
உன் கண்களிலே
களவாடப்பட்டவை தான்.
ஆனாலும் கசக்கின்றன,
என் கரத்தினிலே
நீயிருந்தால்............
என் வரிகள்
அனைத்தும்
உன் விழிதனிலே
வடிக்கப்பட்டவை தான்.
ஆனாலும் வலிக்கின்றன,
என் விரலருகே
நீயிருந்தால்............