மந்தரம் சொல்லித்தர்ற எடமா
ஏண்டப்பா கருமலை உம் பேரன் முத்து வந்தான். எங்கடா கண்ணு படிக்கறன்னு கேட்டன். “சிரி வித்தையா மந்திரி”-ன்னு சொன்னான். இந்தக் காலத்தில எங்கட வித்தையைக் கத்துக்க சிரிச்சிட்டே மந்தரம் சொல்லித் தர்றாங்க.
@@@@@@@@@@@@@@
ஆத்தா, எம் பேரன் படிக்கற பள்ளிக்கூடத்துப் பேரு ஸ்ரீவித்யா மந்திர். ஸ்ரீ – நாம தமிழ்ல் ‘திரு’ –ன்னு சொல்லற வார்த்தை மாதிரி சமஸ்கிருத வார்த்தை. வித்யா –ன்னா கல்வி. மந்திர்-ன்னா ‘கோவில்’-ன்னு அர்த்தம். தமிழ்ப் பேரப் பள்ளிக்கூடத்துக்கு வச்சா கட்டணம் அதிகம் வசூலிக்க முடியாது. எதாவது இந்தி/சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலப் பேர வச்சாத்தான் அதிகக் கட்டணம் வசூலிக்கலாம்.
@@@@@@@@@@@
ஓ.... நம்ம பேரன் சொன்னது அவம் படிக்கற பள்ளிக்கொடத்துப் பேரா. நா எதோ வித்தை கத்துக்கற மந்தரத்தை சிரிச்சுட்டே சொல்லித்தர்ற எடம்னு நெனச்சிட்டேன். நா ஒரு புத்தி கெட்டவ. பள்ளிக்கொடத்த கோயில்னு சொல்லறாங்களா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
shri = Mr. = திரு
vidhya = Lore = Wisdom, knowledge
Mandir means mandir but is generally referred to a place where Hindus go to worship God in the form of various deities.
************************************************************************************************************************************************************************************************************************சிரிக்க அல்ல. சிந்திக்க