என்னுள் நீ

உயிர்_மெய்
முழுவதும்
பாய்கிறது
உன் விழி
மின்சாரம்

உன்னோடு
நடக்கும் போது
மட்டும் தான்
சாலைகள்
சட்டென முடிகிறது

உச்சி வெயில்
உள்ளுக்குள்
ஆலங்கட்டி மழை
உனதருகே நான்

சன்னலை
சாத்தி விடுகிறாய்
மேகத்துக்குள் ஔியும்
நிலவை போல

என் இரவுகள்
இனிக்கிறது
உன் தொலைபேசி
முத்தங்களால்

எழுதியவர் : வேலு வேலு (21-May-17, 12:51 am)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : ennul nee
பார்வை : 442

மேலே