கனவே கனவே வந்து
கனவே கனவே
வந்துவிடாதே.....
எந்தன்
உள்ளத்தில் கவலைகளை
தந்து
போகாதே......
வெந்த நெஞ்சில்
வேல் கொண்டு
வீரம்
காட்டாதே.....!!
கனவே
கனவே
கண்ணுக்குள்ளே
அவளை
கொண்டுவந்து
கொன்றுவிடாதே
என்னை....
என்னை
மறந்தே
ஏழேழு
ஜென்மம்
என்றாச்சு.....!!
தூரங்கள்
தரும்
துயரம்
என்று
தீருமென்று
இருதுருவங்களில்
நின்று
காத்திருக்கும்
விழிகளில்
காதல்
தீபம்
ஏற்றுதடி......!!
காதலின்
தீபமொன்று.....தூரத்தில்
கானம்
கேட்குதே.....
ஏதேதோ
நினைவுகள்
வந்து.....
என்னைச்
சிதைத்துப்
போனதே.....!!