சுயசரிதை

சிறு குழந்தையாய் இருந்த போது சீராட்டப் பட்டேன்..
மெல்ல வளர வளர‌
உதவுவதற்காய் கூடவே வந்தன சொந்தமும் பந்தமும்..

நான் பிறந்த இடம் செல்வச் செழிப்பாய் இருந்தது
வந்தோரெல்லாம் மகிழ்ந்தனர்
என் சிரிப்பில் என் தலையசைப்பில் உள்ளம் நிறைந்தனர்

நான் வளர வளர
காலமாற்றம் என்னை வாட்டத் துவங்கியது
சொந்தங்கள் ஒவ்வொருவராய் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டனர்
என் கூடவே இருந்தோர் காணாமல் போக‌
நான் ஆனேன் தனியாக..

எனக்கு ஆதரவளித்த ஒவ்வொருவராய் விலக விலக
என் கண்முன் என் எதிர்காலம் களவாடப்படுவதாய் உணர்ந்தேன்
இதோ.. இன்று சிதைக்கப்பட்டு எரிக்கப்பட பயணம் ஆரம்பமானது
இப்படிக்கு மரம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-May-17, 7:53 pm)
Tanglish : suyasarithai
பார்வை : 259

மேலே