சொல்லும் பொருளும் 12 - மகிழ், நெகிழ்

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு மகிழ், நெகிழ் என்ற இரண்டு சொற்களை இங்கு பார்ப்போம்.

மகிழ் 2 மகிழ்.
1. Joy, exhilaration; இன்பம். மகிழ்சிறந்து (புறநா. 20, 32)
2. Intoxication from liquor; குடிவெறி. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ (ஐங்குறு. 42)
3. Toddy; மது. பிழிமகிழ் உண்பார் பிறர் (பு. வெ. 2, 11)

மகிழ் 3
Pointed-leaved ape-flower, மரவகை. மகிழ்மாலைமார்பினன் (திவ். திருவாய். 4, 10, 11).

மகிழ்தல்
1. To joy, rejoice, exult; அகங்களித்தல்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. 1057 இரவு

2. To forget oneself in joy; உணர்வழிய உவகையெய்துதல்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281 புணர்ச்சி விதும்பல்

3. To bubble up in boiling; குமிழியிடுதல். சோறு மகிழ்ந்து வருகிறது.

1. To wish, desire; விரும்புதல். மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் (சிலப். 4, 50)
2. To take in, drink; உண்ணுதல். தேறன் மகிழ்ந்து (புறநா. 129)

நெகிழ்தல் - நெகு
2. To become loose; கட்டுத்தளர்தல். கவவுக்கைந் நெகிழ்ந்தைமை போற்றி (அகநக. 26).
3. To slip off, as a garment; நழுவுதல். எல்வளை நெகிழ்போ டும்மே (ஐங்குறு. 20)
4. To grow lean and weak; மெலிதல். மென்றோ ணெகிழ விடல் (கலித். 86)
5. To expand, blossom; மலர்தல். காவியுங் குவளையு நெகிழ்ந்து (சூளா. நாட். 5)
6. To become soft and marshy, as over boiled rice; to lack cohesion, as earth wet by rain; குழைதல்
7. To melt; இளகுதல். சேவடி நோக்கி விரும்பியுண் ணெகிழ (கூர்மபு. பிரமவிஷ்ணு.
8. To relent, as the heart in pity; மனமிரங்குதல்
9. To exude, flow out, as tears from the eyes, as milk from the breast; பொசிதல்
10. To be reduced to powder; பொடியாதல்
11. To give way, yield, as to the axe in cutting; வெட்டு முதலியவற்றிற்குப் பதமாதல்

To forsake; விட்டு நீங்குதல்
5. To discharge, as an arrow; எய்தல். தொடை நெகிழ்த்தலில் (கம்பரா. கும்பகர்ணன். 215)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-17, 8:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 282

சிறந்த கட்டுரைகள்

மேலே