பெண் தான் அழகு

கர்வத்தோடு அவளைப் பார்த்து
நிலா சொன்னது
அழகில் நான் தான்
உயர்ந்தவள் என்று
அமைதியாகப் பதில்
தந்தாள் பெண்
தேய்ந்து கலைவது உன்னழகு
தேயாமல் நிலைப்பது என்னழகு
வெட்கப்பட்ட நிலா மேகத்திற்குள்
தன் தலையை மறைத்துக் கொண்டது
ஆக்கம்
அஷ்ரப் அலி