புள்ளி வைத்த காதல்

புள்ளி வைத்த காதல்
------------------------------------
அவளிட்ட வாசல் கோலத்தை
அனுதினமும் விரும்பி உண்ணுமாம்
அந்த எறும்புக் கூட்டம்

எத்தனை புள்ளிகள்
எங்கே வளைவுகள்
என்ன கிழமையில்
என்ன விதக் கோலம்
என
எறும்புகளுக்கு
அத்தனையும் அத்துப்படி

அன்றும் அப்படியே...
அந்தக் கோலத்தின் வாசம்
எறும்புகளை எட்டும்முன் ...

எங்கோ கிடந்த
மேகக்கூடத்தை எட்டிவிட
கோலத்தைக் காதலித்து
கொட்டிவிட்டது மழையென

புறப்பட்ட எறும்புகளுக்குப்
போட்டது தடை மண்வாசம்...
கரைந்த கோலம்
கோடாய் நீண்டு பயணித்தது
புற்றை நோக்கி...
-----------------------------------------------------------------------
படைத்தவர்:
பெயர்: மீ.மணிகண்டன்
புனைப் பெயர்: மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (25-May-17, 11:56 am)
பார்வை : 186

மேலே