எது உண்மை, எது உண்மை இல்லை

எது உண்மை, எது உண்மை இல்லை
=======================================
இங்க பாரு,
நாளைக்கு பார்க்கலாமா ம்ம்,
தினந்தினம் எதுக்கு பார்க்கணும்,
அப்படி நா உனக்கு யாரு ம்ம்,
ஒவ்வொரு நொடியும் கூடவே இருக்க,
அதுக்குள்ளேயும்
ஏதோ தூரமிருக்கிறது மாதிரி,
உன்னோடு எல்லாமே பகிர்கிறேன்
இருந்தாலும்
தாகத்தை இருத்துகிறாய்
உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன்கிட்ட இருக்கும்
எதிலேயோ சிக்கிப்போயிடறேன்
உன் ஆழமான, இடையறியாத வார்த்தைகளால்
என்னையும் அறியாதே
உன்மேல் பயம் கொள்கிறேன்
எப்போதும் உன்னிடமிருந்து இதையே கேட்கும்படி
கட்டாயத்திற்கு ஆளாகிறேன்
அது என்னன்னா
"நாளை பார்க்கலாமா ம்ம் "
எல்லா வழிகளையும் சுற்றித் திரிந்துவிட்டு
கடைசியாக வந்து நிற்பது
உன் கதவு முன்பாகவே இருக்கும்
உன் புன்னகைக்குப் பின்னாலுள்ள இடுக்குகளில்
ரகசியமாய் தொலைந்துவிட
விரும்புகிறேன்
அம்மாதிரி எண்ணங்கள்
க்ஷணம் தோறும்
என்னை ஆக்கிரமிக்கும் போதெல்லாம் ம்ம்
இப்போதும் கூட
யோசித்து யோசித்து
நிறுத்தி நிறுத்திக் கேட்கிறாய்
முட்டாள் போல ம்ம்,
என்ன "நாளை பார்க்கலாமா ம்ம்" என
இந்த உலகம்
இந்த ஆளுமை
இந்த கண்ணுக்குத் தெரியாத சமுதாயம்,
பிணைப்பான காதல்,
புரிந்துகொள்ள முடியாத (incomprehensible ) உறவுமுறை,
நன்றி கடன்களுக்குள்
தள்ளப்படும்,
அமைவி,
சரி தவறுகளுடைய நிபந்தனைகள்,
எல்லாமே ஒரு பக்கம் தான்,
அவை, உன் கண்களைப்பார்க்கும்,
உன் கண்களால்,
நீ என்னைப்பார்க்கும் முன்பு ம்ம்,
அவை, உன் கைகளில் படும்,
நீ என்னை ஏந்திட நினைக்கும் முன்பு ம்ம்,
அந்த வார்த்தைகள்,
உன் நாவினுடைய நுனியிலேயே தங்கிவிடும்,
ஏதும் சொல்லாதவையாக,
அதனுடைய நாணம்,
அது அதீதமாகி இருக்கும்,
நாம் இருவரும்,
ஒருவரையொருவர், பக்கத்தில் நெருங்கும்போது,
அந்த காந்த விசைகள்,
நமக்குள்,
தானே உருவாகும், எத்தனை இடைவெளியிலும்,
அந்த நடுக்கம்,
நாம் அகன்றுபோயினும்,
அது நம் உடலில் பொறிக்கப்படும் (etched) வாசனையாக,
இதெல்லாமே இன்னொரு பக்கம்,
எது உண்மை, எது உண்மை இல்லை,
சுற்றி ஒருவரும் இல்லை,
குருதி ஒழுகிக்கொண்டே,
துடிக்கும் இதயத்தின்மீது அக்கறைக்கொள்ள,
எப்படியாவது, எங்கேயாவது வைத்து,
உன்னை சந்திக்க விழையும்போது,
ஒவ்வொரு வார்த்தையும்
உன்னைப்பற்றி பேசும்போது, உனக்காக பேசும்போது,
எத்தனை கனவுகளில் நாம்,
ஒன்றிணைந்தபோதும் ,
எல்லாத்திலும் நான், நீயானபோது,
இந்த வாழ்க்கையின் கதை,
ஒரே ஒரு வார்த்தையை, சுமந்திருக்கும்போது,
நாம், இந்த உலகத்திற்கு
ஒரு கதையாகிறோம்,
இந்த கதையில் நாம், வேறு உலகத்தில் இருப்போம்,
இந்த கதையில் நமக்கு, எல்லைகள் இல்லை,
யாருடைய ஆளுமைகளும் இல்லை,
நம்மை வைத்துதான்,
எல்லோரும்,
காதல் கற்றுக் கொண்டிருப்பார்கள்,
இது தான் காதலா,
இல்லை மற்ற ஏதேனும் தான்
காதலா என்று,
எது உண்மை, எது உண்மை இல்லை என்று ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (26-May-17, 6:29 am)
பார்வை : 319

மேலே