அவளும் நானும் வானும் மேகம் போல

கல்லூரியில் முதல் நாள் அவளை கண்டேன்.,
துரு துறுவென நானும் வேர்த்து ஒழுகிய முகத்துடன் அவளும் வெட வெடத்து நின்றாள் ஏதோ ராக்கிங்காம்., தேவதையும் பயம் கொள்ளும் என்று நான் அறிந்த நாள்.
ராக்கிங்ல அவள் கை குலுக்க பணிக்கப்பட்டேன்., தலையை திருப்பாமல் கண்களை மட்டும் சுழற்றி என்னை பார்த்தாள்., அம்மாவை தவிர பிற பெண்களிடம் அதிகம் பேசி பழகிடாதவன் ஏனோ பார்த்ததும் அவளை பிடித்துப் போனது அழகாய் அப்படி ஒரு அழகி புது நிறம்., அழகான பல்வரிசையில் இரு தெத்துப்பல்., திருத்தப்படாத புருவம் என ஏதோ எனக்கு பிடித்தது., ஆசையாய் நான் கை நீட்ட சிவந்த விழியாள் என்னை முறைத்த படி கை குலுக்கினாள்., அறிமுகம் இல்லா நாங்கள் அறிந்து கொண்டோம் பின்னாளில்., கல்லூரிக்கு செல்வதே அவளை கணத்தான் என்றானேன் எங்கள் உலகம் வேறுபட்டு இருந்தது அங்கு நட்பு மட்டுமே அனைத்திற்கும் பதிலாய் இருந்தது., உறவை தாண்டிய உரிமையாய் ஒரு நட்பு அழகான உலகத்தில் பயணித்தோம் நாட்கள் போனது கல்லூரியில் அனைவரின் இதழ்களிலும் மலர்ந்திருந்தது நாங்கள் மட்டுமே அவனும் அவளும் குமார் ., ஜானகி., இவர்கள் பிரியத்தை பார்த்த குமார் அம்மை அப்பர் ஜானகி வீட்டிற்கு சம்பந்தம் பேச சென்றார்கள் குமாரிடமும் சொல்லாமல் அவனுக்கு இன்ப அதிர்ச்சி தந்திட., இதில் ஜானகி வீட்டார்க்கும் விருப்பமே., ஏனோ ஜானகி கேட்ட முதல் கேள்வி இது குமாருக்கு தெரியுமா?? இல்லை நாங்கள் சொல்லவில்லை என்றார்கள்., வழக்கமான வழக்கத்தோடு குமார் ஜானகி இல்லம் நுழைந்தான் அங்கு இருந்த சூழ்நிலை கண்டு அதிர்ந்தான் கலங்கிய
விழியோடு அவள்., அவள் கலங்கிய பின் இவன் கொண்ட அதிர்ச்சி இன்பமானது எல்லோர் முகத்திலும் குழப்பம் இவனை தவிர., என்ன இது என்றவனுக்கு உனக்கும் ஜானகிக்கும் திருமணம் பேச வந்தோம் என்றதற்கு அவள் என் தோழியே என்றான் கம்பீரமாய், இருக்கட்டும் மணம் முடிந்த பின் மனைவியே என்றார் ஜானகி அப்பா., எங்களை வளர்த்தவர்கள் நீங்கள் புரிந்தது அவ்வளவே நட்பு எங்களுக்கு நட்பு மட்டுமே அதையும் தாண்டி எங்களுக்குள் உறவு வேண்டும் என்றால் அவள் என் தாயே அன்றி தாரம் அல்ல என்று சொல்லும் போதே ஓடி வந்து அவன் கைகளை பிடித்து கண்ணீரில் நனைத்தாள் . இவர்களே நம்மை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மை சுற்றி உள்ள சமூகம் எப்படி சரியாக புரிந்து கொள்ளும்., ஆணும் பெண்ணும் உறவுக்குள் தான் இருக்க வேண்டுமா உறவை தாண்டி உரிமை உள்ள நட்பாக இருந்தால் தவறு தான் இச்சமூகத்தில் ,போதும் குமார் இங்கேயே நிற்கட்டும் நம் நட்பு. நாளை நமக்கென வாழ்கை துணையாக வருபவர்களும் நம்மை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதற்கில்லை என்றவள் ஓடி சென்று தன் அறை கதவை சாத்திக்கொண்டாள்., இவர்களை தவறாக புரிந்து கொண்டு செய்வதறியாது நின்றார்கள் பெரியவர்கள்.,
காலங்கள் ஓடின இன்று குமாருக்கு திருமணம் சொந்த பந்தங்கள் என மண்டபமே சிரித்துக் கொண்டிருந்தது குமார் மட்டும் யாரையோ தேடினான் யாரை தேடுகிறான் என்று சொல்லத்தான் வேண்டுமா என்ன ஜனாகிக்கு இப்போது ஒரு மகள் இருக்கிறாள் குடும்ப சகிதமாக லண்டனில் தங்கிவிட்டார்கள்., பல வருடங்கள் ஆகிறது இருவரும் பேசி இப்போது ஒரு தோழியின் உதவியால் ஜானகி முகவரி அறிந்து வாட்ஸாப்பில் பத்திரிக்கை அனுப்பி வருவாளா மாட்டாளா என்னும் எதிர் பார்ப்போடு மாப்பிளை அறையில் பட்டு வேஷ்டி சட்டையை பார்த்து நிற்கிறான். தம்பி என்ற குரலோடு குமார் அப்பா வந்தார் இவர் உன் நண்பர் உன்னை பார்க்க வேண்டும் என்றார் நீங்கள் பேசிவிட்டு சீக்கிரம் கிழே வாருங்கள் முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது என்றபடி போய்விட்டார். வணக்கம் நான் தேவன் ஜானகியின் கணவர் என்றது எல்லையில்லா ஆனந்தம் குமாருக்கு வாங்க சார் நான் உங்களை பார்த்ததில்லை அதான் அடையாளம் காண முடியவில்லை ஜானகி வரலையா என்றான் குழந்தை போல., நீங்கள் செய்தி அனுப்பியது என் போன் எண்ணிற்கு இன்று உங்கள் திருமணம் என்று அவளுக்கு தெரியாது என்று முடிப்பதற்குள் நீங்கள் அவளிடம் சொல்லவில்லையா அவளை அழைத்து வரவில்லையா என்ற குமாரின் முகம் கருத்தது., உங்கள் தோழி போலவே நீங்களும் அவசரக்காரர் போல அதனால் தான் இத்தனை வருடம் நட்பை பரி கொடுத்துள்ளீர்கள்., அவளுக்கு தெரியாது என்றேன் அவளை அழைத்து வரவில்லை என்று நான் சொல்லவில்லையே., இங்கு வரும் வரையில் உங்களுக்கு தான் திருமணம் என்று அவள் அறியவில்லை இப்போது தெரிந்திருக்கும் ., தேவன் ஜானகி என்றதும் அவள் அறைக்குள் வந்தாள்., குமாரை பார்த்ததும் அவ்வளவு ஆனந்தம் அவளுக்கு உங்களை பற்றியும் உங்கள் நட்பை பற்றியும் ஜானகி என்னிடம் நிறைய சொல்லி இருக்கிறாள்., என்னை கேட்டாள் நீங்கள் பேசாமல் பிரிந்தது தவறே அன்றைய தலைமுறை பெண்ணை வீட்டிற்குள் ஒரு பொருளாக பார்த்தனர் எனவே அவர்கள் ஆண்பெண்ணை பிரித்தறிய மாட்டார்கள்., இன்றைய தலைமுறை பெண்ணை சக மனுஷியாக பார்க்கிறார்கள் எனவே உங்கள் நட்பு என்றுமே நட்பு தான். உங்கள் நட்புக்குள் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?? என்றார் தேவன் சிரித்த முகத்தோடு... உங்களோடு சேர்த்து என் மனைவியையும் நம் நட்பு வட்டத்தில் இணைக்க வேண்டும் என்று சொல்லி சிரித்தான் குமார்., அவனோடு மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்., ஜானகி தேவன் நெஞ்சில் சாய்ந்தால் தன் கணவரின் பெருந்தன்மை எண்ணி ஆனந்தத்தில்
ஜானகி மணமகன் தோழியாக நின்றாள்
ஆனந்த திருமணம் அதிசய திருமணம் அழகிய திருமணமே என்னும் பாடல் ஒலியில் குமார் திருமணம் இனிதே நடந்தது அதனோடு பழைய நட்பு மீண்டும் மலர்ந்தது
இனி ஒரு போதும் உதிராது.,

எழுதியவர் : மீனாக்ஷிகண்ணன் (27-May-17, 8:36 pm)
பார்வை : 582

மேலே