வெட்டிவிடுவானோ

கதிரவனின் ஒளி கண்ணில் தட்டியது. மெதுவாக எழுந்தேன் . வயதாகி விட்டாலே மனதின் வேகம் உடம்புக்கு வருவதில்லை . வெளியில் ஒரே சத்தம் கேட்டது . மெதுவாக சென்று பார்த்தேன் .
என் மகன் வேறு சிலருடன் பேசி கொண்டிருந்தான் . அவர்கள் கையில் கோடரி , அருவாள் போன்றவை இருந்தன .

எதுக்காக இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். என்று யோசித்து கொண்டே வெளியே வந்தேன் . மகன் கதிரேசன் நின்று கொண்டிருந்தான் . "யாரப்பா இவங்க ? எதுக்கு வந்திருக்காங்க ? "
" அது அம்மா இந்த மரத்தை வெட்ட தான் . ரொம்ப நாளா நின்னிட்டுருக்கு . பழவும் குடுக்கறதில்ல , சும்மா இடத்தை அடைச்சுட்டுருக்கு அதான் வெட்டிடலாம்னு நினைச்சேன் ."
மனதில் எதோ இடி விழுவது போல் இருந்தது . நான் இந்த வீட்டுக்கு முதல் அடி வச்சது முதல் ஒரு தோழியாய் வீட்டு முன் நின்று தலையை ஆட்டி சிரிக்கும் ஜீவன் . என் வாழ்வின் ஏத்த இறக்கங்கள் அனைத்தையும் பார்த்தவள் . என் மூன்று பிள்ளைகளையும் தன் கிளைகளில் சுமந்து தாலாட்டி மகிழ்ந்தவள் . அவளின் கருணையால் கிடைத்த பழத்தை உண்டு பசியை போக்கிய காலவும் உண்டு . அவளை பார்க்க வந்த பறவைகளை பார்த்து என் மகன் விளையாடியதும் சாப்பிட்டதும் மனதில் திரை போல வந்து போனது .
கிளைகளை வெட்ட துடைங்கினார்கள் . ஓன்று , ரெண்டு நீர்த்துளிகள் கையில் விழுந்தன . அழுகிறாளோ என் தோழி என்று மனசு படபடத்தது .

கதிர் ஏன்டா அதை வெட்டுறீங்க? வேணாம்டா. இந்த வீட்டில ஒருத்தர போல ட அதுவும் .

"ஹய்யோ !! அம்மா உனக்கு ஒன்னும் தெரியாது . கம்னு இரு . உனக்கு எல்லாமே குடும்பத்தில ஒன்னு தான் . ஆடை விக்கும்போதும் , கோழியை விக்கும்போதும்லாம் இது தான் சொன்ன .
ஒண்ணுக்கும் உதவாததை எல்லாம் வீட்டில வச்சிட்டு எதுக்கு ? வீட்டு மேலெ வேறே வந்து கிடக்கு , வாசல்லாம் ஒரே குப்பையா இருக்குனு மனைவியோட திட்டு வேறெ?"

ஒண்ணுக்கும் உதவாதத ? அப்போ நானும் அப்படித்தானே ? வெட்டி விடுவானோ ? கண்ணில் இருந்து தானாய் கண்ணீர் கொட்டியது .

மரம் தந்த நிழலை நீ வெயில் வரும்போது உணர்வாய் . வீட்டின் மேல் விழுந்ததால் வெயிலின் தாக்கம் உள்ளே வராமல் வீடு குளிர்ந்து இருந்தது . அது புரியாமல் வெட்டுகிறாய். அதுபோல் தான் பெரியவர்களும் அவர்களின் பேச்சு இப்போ புரியாது . வாழ்க்கை அதை உனக்கு கற்று கொடுக்கும் . என்று மனதில் நினைத்து கொண்டே பாரமான மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

எழுதியவர் : (27-May-17, 1:05 pm)
சேர்த்தது : Sarah14
பார்வை : 327

மேலே