பொய் புனைந்து எழுதுவதாய் தோன்றவே இல்லை
அடி போடி கிறுக்கி !
எத்தனை கவிதைகள்
நித்தம் உன் அழகை
பற்றி எழுதினாலும் !
எத்தனை கவிதைகள்
நித்தம் நம் காதலை பற்றி
எழுதினாலும் !
மெய்யாய்த்தான் எழுதுவதாய்தான்
உணருகிறேன் !
ஒன்று கூட பொய் புனைந்து
எழுதுவதாய் தோன்றவே இல்லை !