இன்று நீ வருவாயா

உன்னைக் கண்ட போதே
என் இதயம் சுக்கு நூறாகி விட்டது
உன் விழிப்பாய்ச்சல் தாங்க முடியாமல்
கல் பட்ட கண்ணாடியாய் நான் சிதறிப் போனேன்
நீ அருகில் இருந்தால் ஆனந்தப் படுகிறேன்
மழை கண்ட பயிராக உடல் செழிக்கிறேன்
நீ இல்லாத போது ஆற்றாமை கொள்கிறேன்
நீரில்லாத நிலமாய் கருகிக் காய்கிறேன்
எத்தனை ஏக்கத்தை என்னுள்ளம் தாங்கும்
எத்தனை ஏகாந்தத்தை அது உள் வாங்கும்
காற்றடைத்த பலூன் போன்று அது வீங்கிக் கிடக்கிறது
நீயின்றி வெந்து வாடும் என்னுடல் மீது
கருணை மழை பெய்யக் கூடாதா
இனியும் என்னுடல் தாங்காது இன்றே நீ வருவாயா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (8-Jun-17, 1:17 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 390

மேலே