நிலைமண்டில ஆசிரியப்பா -- மரபு கவிதை

கற்பின் கனலாய் மாதவி -- தினக்கவிதைப் போட்டி

பாரதிதாசன் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்

பாவகை :- நிலைமண்டில ஆசிரியப்பா ( மரபு கவிதை )

கற்பினில் கனலாய் மாதவி நிலைக்கப்
பற்பதம் சிலம்பின் பாத்திரம் உருவில்
நாட்டியப் பருவம் நர்த்தனம் புரியப்
பாட்டுடை நிறைந்த பாசம் தன்னில்
காட்டிடும் நயனம் காண்போர் காண
வாட்டம் போக்கிடும் வகையுடைச் செயலாம் .
ஆட்டம் மட்டுமே அழகியின் மாயை .
தேட்டமும் பெருகிய தெருவினில் நிற்க
கூட்டமும் கூடிக் கோவில் தெய்வமாய்ப்
பாட்டுடன் கலந்துமே பரதம் . தேவதை
வழிபடல் உணர்ந்து வாசம் கோவலன்
விழிமேல் கொண்டான் வீதியில் இறங்கிக்
கண்ணகி மனையாள் கண்ணீர் கோலம்
மண்ணில் மன்னவன் மனத்தில் கள்ளமே
புகுந்திட அறியாள் பூவை மாதவி
வகுத்திடும் அறத்தை வகையுறக் காக்க
மேகலை மகளாய் மேதினி தழைக்கத்
தேகம் விற்கா தேவி யாகியே
துறவு பூண்டு தூது சென்று
பிறப்பின் கற்பின் பின்னே பற்றியும்
கனலாய் மாறிக் காசினி உணரவும்
மனத்தினில் பெரியாள் மாமகள் உலகிலே !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Jun-17, 10:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 134

மேலே