பள்ளி வாழ்க்கை

பள்ளி வாழ்க்கை
அறம் செய் என ஆத்திச்சூடி சொன்னதும் !
அனைவரும் சமமென சீருடை சொன்னதும் !
தமிழ்தாய் வாழ்த்தை தலைநிமிர்ந்து சொன்னதும் !
தமையன் கை பிடித்து முதன்முதலில் சென்றதும் -இங்கேதான் !

ஆண்டுக்கு ஒருமுறை வகுப்பறை மாறுவோம் !
அதில் அடிக்கடி சண்டை வந்து சேருவோம் !
விடுமுறையிலும் நண்பனை தேடுவோம் !
விடைபெறா நாள் வேண்டும் என வேண்டுவோம் !

வீட்டுப்பாடத்தை தவிர்த்தோம் !
விளையாடச் செல்லவே துடித்தோம் !
எதிர்பாலிடத்தில் நாணினோம் !
பின் அதுவும் இயல்பென தேரினோம் !

மை சிந்திய நண்பனின் பேனாவும் !!
புத்தகத்தில் அடைகாத்த மயில் தோகையும் !!
காக்காய்க்கடி கடித்த மிட்டாயும் !!
இறுதிநாள் மைபடிந்த சீருடையும்!!
---நம் நினைவின் புதையல்கள்----
-என்றும் அன்புடன்
நா.அருண் பிரபாகரன்

எழுதியவர் : நா.அருண் பிரபாகரன் (14-Jun-17, 10:42 pm)
சேர்த்தது : Arun Prabakaran
பார்வை : 3281

மேலே