நான் ஏன் படிக்க வேண்டும்

இங்கே நான் ஒரு போட்டியாளன்,
பலரை பின்னுக்கு தள்ளி நான் முன்னேற வேண்டும,
அதற்காக நான் படித்தாக வேண்டும்!
என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?
என்பதை எண்ணி நான் படித்தாக வேண்டும்!
என் பெற்றோர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய,
நான் படித்தாக வேண்டும்!
என் பள்ளி மிகவும் பிரபலமடைய
நான் படித்தாக வேண்டும்!
மொத்தத்தில் என் கனவுகள் என்னவென்று தெரியாமலே,
கண்டிப்பாக நான் படித்தே ஆக வேண்டும்!..

எழுதியவர் : செல்வ சரவணா.. (14-Jun-17, 10:09 pm)
சேர்த்தது : செல்வசரவணா
பார்வை : 243

மேலே