கரங்களை நீட்டுவாய்

தாயின் கதகதப்பில்
வளரவுமில்லை..,
தந்தை முத்தங்கள்
எம்மை தீண்டியதில்லை ..!

"பிறந்தேன்" .. உடனே
வீதியிலே கடத்தி ..,
போனாலே அவள்
மஞ்சள் சேலை உடுத்தி...

பசியில் "அம்மா " என்று
அழுதேன் ..,
பிணியில் தாயை தேடி
தொலைந்தேன் ..,
பின்பு மெல்ல உணர்ந்தேன்
அவள்
செவிகள் இயங்கவில்லையே ...!

குளிரில் நடுங்கி
கிடந்தேன்..,
வெயிலில் மயங்கி
விழுந்தேன் ..,
ஏன்னா பட்டபின் புரிந்தேன்
அவள்
கண்ணில் பார்வையில்லயே..!

அப்பன் பேறு தெரியலான
அத்தாவை தான் ஏசுவாங்க ..!
அத்தாவையே தெரியலான
இங்க தாண்டா விசுவாங்க....!

பேருக்குத்தான் நாங்கள்
கடவுளின் பிள்ளை..,
அவருக்கு குடும்ப கட்டுப்பாடு
பண்ண யாருமே இல்லை..!

போதிய உணவு இருக்காது.,
புடிச்ச உடை கிடைக்காது ..,
வாயை தொறந்து கேட்கவும்
மனிஷால் யாரும் தெரியாது ..!

மனித உருவில் கடவுளே ..,
காப்பகத்தின் தலைவரே ..,
உடையும் உணவும் கொடுத்தாரே ..!
கல்வி எனும் செல்வியை
அள்ளி அள்ளி தந்தாரே ..
என்னோ இன்று
ஜீவன் விட்டு பிரிந்தாரே ..!

அனாதைகள் மீண்டும்
அனாதையாய் ..!
மீண்டுவர நீங்கள்
உதவி கரங்கள் நீட்டுவாய் ..!

எழுதியவர் : இரா.சீ .சுகுமாரன் (14-Jun-17, 10:03 pm)
சேர்த்தது : இரா சீ சுகுமாரன்
பார்வை : 62

மேலே