மனிதர்களும் உணர்வுகளும்

காளியம்மா..
2007-ல இருந்து 2015 வரைக்கும் எங்க வீட்ல எங்க பாட்டிக்கும், அத்தைக்கும் உதவியாய் இருந்த அக்கா..எங்க வீட்டுக்கு வந்து சேரும்போது, அவங்களுக்கு தோராயமா 40 வயசு இருக்கலாம்..அவங்களுக்கு 2 பெண் பிள்ளைகள், முறையே அகிலா(15), சின்னவள்(பெயர் நினைவில் இல்லை)13 வயது இருக்கலாம்..அவர்கள் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியது கூட இல்லை..அம்மாவுக்கு ஒத்தாசையாய் அவர்களும் பிற வீடுகளில் வீட்டுவேலைகள் செய்வதுண்டு ... எப்போதாவது அக்கா வரமுடியாத சந்தர்ப்பங்களில், அகிலா எங்கள் வீட்டுக்கு வருவது உண்டு..என்னை விட சிறிய பெண், அதுவும் 18 வயது நிரம்பிடாத குழந்தைகள் வேலைக்கு வருவது நெஞ்சை நெருடிபடியால், அக்காவிடம் பிள்ளைகளை எங்கள் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..அதன் பின் ஓராண்டு கழித்து, அகிலா-வின் 16-வது வயதில் அவளுக்கு திருமணம்..மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம்..20 நாள் விடுமுறையில் சென்றாள் அக்கா..
பெங்களூர்-இல் இருந்து விடுமுறைக்கு கோவைக்கு வீட்டுக்கு போகும்போது, அக்காவிடம் விசாரிப்பது உண்டு ...அகிலா அம்மாவாகப் போகிறாள் என்று சொன்னாள் அக்கா..பின்னர் அகிலாவின் பிரசவத்துக்காக ஒன்றரை மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டாள்..கையும், வேலையும் சுத்தமாய் இருந்த அக்காவை விடவும் முடியாமல், வேறு ஆள் தேடவும் விரும்பாமல் , அத்தையும், பாட்டியும் தினமும் அக்காவை திட்டிக்கொண்டே , ஒன்றரை மாதமும் ஒப்பேத்தி விட்டார்கள் ...
அடுத்த வருடம்..அகிலா மறுபடியும் அம்மா ஆனாள்.. 19 வயதில் 2 குழந்தைகளின் தாய் அகிலா..மறுபடியும் ஒன்றரை மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டாள் அக்கா...பெண்களுக்கு சீர் செய்ய வேண்டும் என்று சம்பள உயர்வு கேட்டு பெற்றுக்கொண்டாள்..
இதற்கிடையே சின்னவளுக்கு ஊரில் இருந்து நல்ல சம்பந்தம் வந்திருப்பதை சொன்னாள் ..திருமணமும் நடந்தது , அக்காவிற்கு விடுமுறையும் கிடைத்தது..இப்போது பொறுத்தது போதும், இனி வேறு ஆள் தேடுவது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் எங்கள் வீட்டில்..
இதற்கிடையே, அக்காவின் மகன் வேறு சாதிப்பெண்ணை காதலித்து மணந்துகொண்டான்...ஊருக்கு பயந்து 2 மாதம் தலைமறைவாய் இருந்தவனுக்கு துணையாய் அக்கா...அந்த இரண்டு மாதத்தில், பல நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டாள்..
சின்னவளுக்கு பிரசவம் என்று மறுபடியும் விடுமுறைக்கு விண்ணப்பித்தாள் அக்கா...
கடுப்பின் உச்சத்தில் இருந்தாலும், அக்காவின் நிலை அறிந்து, நடந்து கொண்டார்கள் எங்கள் வீட்டில்..
(US vandha ஒவ்வொரு ஆறு மாதமும், வயதான பாட்டி, வரப்போகும் தங்கையின் திருமணம் , இன்னொரு தங்கை வயிற்று மகனின் பிறந்தநாள், அப்பாவின் சஷ்டிபூர்த்தி என்று டிசைன் டிசைன்-ஆ லீவ் application போட்டுட்டு மேனேஜர் approval -கு வெயிட் பண்ணும்போது, என் மேனேஜர் எனக்கு தெய்வம்யா !!!!)
ஒவ்வொரு விடுமுறையிலும், அக்காவின் வீட்டு கதைகள் கேட்கும்போதும், அகிலாவையும், சின்னவளையும் நினைத்து நான் வருந்தியது உண்டு ..சின்ன வயதிலே, படிப்போ, வசதியோ இல்லாமல் , குடும்பம் நடத்தும் இந்த குழந்தைகள், பின்னாளில் இன்னொரு காளியம்மா-வாக ஆகிவிடக்கூடாதென..
அக்காவிடம் அவள் கதை கேட்கும் எங்களிடம், ஒரு நாள் ஒரே ஒரு கேள்வி கேட்டாள் அக்கா, "யம்மா மஞ்சம்மா அகிலா-வ விட பெரிய புள்ள..அகிலாவுக்கு இப்போ ரெண்டு குழந்தைங்க..பெரியவுனுக்கு 4 வயசாக போகுது...எப்போ தான் இந்த புள்ளைக்கு கண்ணாலம் பண்ணுவீங்க..இப்படியே படிச்சுட்டு , வேலைக்கே போயிட்டு இருந்தா எப்ப தான் குடும்பம் நடத்துறது..?"
(என் மண்டையில் அப்போது தான் சுரீர் என்று உரைத்தது. மனிதர்கள் எல்லோரும் தான் சந்தோஷமாக இருப்பதாகவும், அடுத்தவர்கள் ஏதோ கஷ்டத்தில் இருப்பதாவும் ஒரு false perception ல திரியுறோம் ..இது கூட பரவாயில்ல..சில ஜென்மங்கள் தான் ஏதோ பெரும் கஷ்டத்துல இருக்கிறதாவும், மத்தவா கும்முன்னு இருக்கிறதாவும், நெனச்சு பொலம்பும்போது அழுவதா சிரிப்பதா-னே நேக்கு புரியாது!!)
வந்தது வினை...அக்காவின் எதார்த்த கேள்வி, பதார்த்தமாய் எதிரொலித்தது...வேலைக்கு வேட்டு வைத்தது...இன்று வேறொரு அக்கா எங்கள் வீட்டில்...

Moral of the story:
1. Put yourselves in their shoes.
2. In this world, anyone can replace you anytime, no matter how good you are..
3. Inspite of being good, you can get replaced by someone, but they cant replace the good memories you had given.
4. கர்மம் புடிச்ச இந்த மனுஷ ஜென்மங்கள் எதுக்கு கோவப்படும், எதுக்கு கோவப்படாது-னு psycho analysis பண்ணமுடியாது ..so மனசுல படுறத ஒடனே கேட்டுறனும்..

எழுதியவர் : -தமிழச்சி விஜி (15-Jun-17, 11:42 am)
சேர்த்தது : விஜயேஸ்வரி
பார்வை : 332

மேலே