சொல்லும் பொருளும் 13 - கலை, களை, கழை

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு கலை, களை, கழை என்ற மூன்று சொற்களை இங்கு பார்ப்போம்.

கலை

1. Stag, buck; ஆண்மான். கவைத்தலை முதுகலை (தொல். பொ. 600, உரை)
2. Male black monkey; ஆண் முசு. (தொல். பொ. 601, உரை)
3. Shark; சுறாமீன்.
4. Capricorn of the Zodiac; மகர ராசி
5. Cloth garment; சீலை. அருங்கலை யயலுற (பாரத. குருகுல. 57)
6. Saddle of a horse; குதிரைச் சேணம்

கலை

1. Portion; அமிசம். தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26)
2. Moon's phase corresponding to a titi; சந்திரனது பதினாறமிசத்து ஒன்று. வெண்மதியி னொற்றைக் கலைத்தலையாய் (திருவாச. 6, 40)
3. Brightness, splendour; ஒளி. நிறைகலை வீச (அரிசமய. பத்திசார. 106)
4. Minute portion of time, 30 காட்டை, about 8 seconds; முப்பது காட்டை கொண்ட நுட்பமான காலம். (கூர்மபு. பிரமாவி 3)
5. Indian hour =1/60 of a பாகை=1/30 of a zodiacal sign; ஒருபாகையின் அறுபதிலொன்று
6. (Mus.) A time measure; ஒரு தாளப் பிரமாணம்.
7. Arts and sciences. See அறுபத்து நாலுகலை.
எண்ணென் கலையோ ரிருபெரு வீதியும் (சிலப். 14, 127)
8. Learning, erudition; கல்வி
9. Treatise, book; சாத்திரம். கலை நவின்ற பொருள்களெல்லாம் (திருவாச. 12, 13)
10. Language; பாஷை. தென்கலையே முதலுள்ள பல்கலை ( கந்தபு. நகரப். 49)
11. Part of a vaṇṇam; வண்ணப்பாட்டின் ஒரு பாகம்.
12.வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. கலைமுதலாய நிலைமலி தத்துவம் (ஞானா. 3, 1)
13. Breath passing from the nostril; இடைகலை பிங்கலைகள்
14. Body; சரீரம். கலையிலாளன் (சிலப். 10, 28)
15. Postures in sexual enjoyment; புணர்ச்சிக்குரிய கரணங்கள். (சீவக. 1625, உரை.)
16. Branch of a tree; மரக்கவடு

கலை

Woman's girdle consisting of seven strands of jewels; மேகலை காஞ்சியென்னும் இடையணிகள். வாமாண் கலைசெல்ல நின்றார் (திருக்கோ. 263)

கலை 6

கல்.
Core, solid part of timber; மர வயிரம்

கலை 7
A kind of camphor imported from Kalah in the Malay Peninsula = கர்ப்பூர வகை. (சிலப்.14,109, உரை)

கலை 8
River portia tree; காஞ்சிமரம்

கலை 9
1. A minute division =1/60 of a degree ; பாகையின் அறுபதிலொன்று
2. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23)

கலை 10 தல்
To be startled; to shy; மிரளுதல்

கலைதல்

1. To disperse, as an assembly, a defeated army; to be driven to different parts, as a herd pursued by dogs; to be scattered, as clouds; குலைதல். உடலுமுயிரு நினைவுந் தம்மிற்கலையா (அஷ்டப். அழகரந் 12)
2. To be ruined, destroyed; அழிதல். காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் (அருட்பா, i, விண்ணப்பக்கலி, 50)
3. To be absent-minded, to wander in thought; நிலைகுலைதல். தியானம் கலைந்து விட்டது.
4. To be out of tune, as an instrument; சுருதி குலைதல்
5. To be blurred beyond recognition, as the writing on slate; பலகை முதலியவற்றில் எழுதப்பட்டவை அவிதல்.
பலகையிலெழுதியது கைபட்டுக் கலைந்து போயிற்று
6. To glide from one tune into another; இராகம் மயங்குதல்

கலைத்தல்

1. To disperse, derange, break up, disorganize, scatter rout; குலைத்தல், பற்றலரைக்கலை . . . வேந்தர் (அஷ்டப். திருவரங்கத்தங் 25)
2. To separate from a company, detach, banish, exile, exclude; பிரித்துநீக்குதல். கூட்டத்தைக் கலைத்தான்
3. To frustrate or thwart an object; எண்ணங் கலைத்தல். இராட்சத குலத்தைத் தொலைக்கின்றான் இராவணனைக் கலைக்கின்றானே
4. To relax, put out of tune, as stringed instruments; சுருதி கலைத்தல்
5. To erase, as writing on slate; பலகை முதலியவற்றில் எழுதப்பட்டவற்றை அழித்தல். பலகையில் எழுதியிருப்பதைக் கலைத்தான்.
6. To chase; ஓட்டுதல். அவன் என்னை வெகுதூரம் கலைத்தான்.

களை 1

1.Tares, weeds; பயிர் வளர்தற்குத் தடையாக முளைக்கும் பூடு. பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (குறள், 550)
2. Defect, fault; குற்றம். என்களைகளை யறுக்கும் (தேவா, 818, 5)

களை 2
Weariness, exhaustion; அயர்வு. வேட்கையாற் களையினோடு கதுமெனச் சென்று

களை 3

1. A digit of the moon; சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61)
2. Beauty, splendour, glow, lustre; அழகு. முகமுங் களைக ளின்று (தாயு. வண்ணம்.).
3. The element of time-measure which specifies the various sub-divisions of akṣarakālam, one of ten tāḷa-p-pirāṇam, தாளப்பிராணத்தொன்று (பரத. தாள. 49.)

களை 4
Cut with hoe; களைக்கோலால் வெட்டிய வெட்டு

களை 5
A linear measure of fingers breadth or viraṟkaṭai; 80 விரற் கடையளவு (சிற்பரத். 16)

கழை
கழி
2. Bamboo bottle; மூங்கிற்குழாய்.கழைபெய் தீந்தயிர் (மலைபடு. 523).
3. Musical bamboo-pipe; வேய்ங்குழல். கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப்பிரபந்.வெங்கையு.98)
4. Pole used for propelling boats; ஓடக்கோல். கழைநிலை பெறா அக் காவிரி நீத்தம் (அகநா.6)
5. Elephant-goad; குத்துக்கோல். கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111)
6. Sugar-cane; கரும்பு
7. Stem of sugar-cane; shaft of a bamboo; தண்டு. நெடுவரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27)
8. The seventh nakṣatra. புனர்பூசம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-17, 11:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31374

மேலே