சொல்லும் பொருளும் 14 - கண்டம், துண்டம், முண்டம், பண்டம், தண்டம்

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. பேச்சு வழக்கில் கண்ட துண்டம் என்று பேசுவார்கள்; எனவே கண்டம், துண்டம், முண்டம், பண்டம், தண்டம் என்ற ஐந்து சொற்களை இங்கு பார்ப்போம்.

கண்டம் 1

1. Spurge wort; See கள்ளி (மலை)
2. Crab's-eye root; குன்றிவேர்
3. Vermilion; சாதிலிங்கம்

கண்டம் 2

1. Throat; தொண்டை. காராருங் கண்டனை (தேவா. 1071, 1).
2. Neck; கழுத்து. கண்டஸ்நானம்
3. Voice, vocal sound; குரல். குழலொடு கண்டங்கொள (மணி. 19, 83)
4. Elephant's neck rope; யானைக்கழுத்திடு கயிறு. (பிங்)

கண்டம் 3

1. Piece, cut or broken off; fragment, slice, cutting, chop, parcel, portion, slip; துண்டம். செந்தயிர்க் கண்டம் (கம்பரா. நாட்டுப். 19).
2. See கண்டசாதி. (பரத. தாள. 47)
3. Curtain made of parti-coloured material; பல்வண்ணத்திரை. நெடுங்காழ்க் கண்டங்கோலி (முல்லைப். 44)
4. (Geography) continent; நிலத்தின் பெரும்பிரிவு
5. Small ridges between paddy fields which divide the field into plots and embank the water required for the crop; வயல்வரம்பு
6. Block of land measuring between 300 and 350 acres taken for purposes of survey; அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி
7. Section, part; பகுதி.
8. Jaggery; வெல்லம்
9. A kind of sugar; கண்டசர்க்கரை
10. Sword; வாள்
11. Iron stylet for writing on palmyra leaves; எழுத்தாணி
12. Coat of mail; கவசம்
13. The rising, fourth, seventh and tenth signs; கேந்திரம். பொன்னவன் கண்டத் துறினு மமுதெனப் போற்றுவரே (விதான. குணகுண. 25).

கண்டம் 4

1. A division of time, one of 27; யோகமிருபத்தேழனு ளொன்று.
2. Critical period, calamitous or other adverse effect of the malignity of planets ruling the destinies of a person according to his horoscope; ஆபத்து

கண்டம் 5
Bell; மணி

கண்டம் 6
A portion of the front hall, in a temple; கோயில் முக மண்டபப்பகுதி

கண்டம் 7 n. cf. கண்டாரி.
a thorny plant; கண்டங்கத்திரி

கண்டம் 8
Poniard; உடைவாள். (யாழ். அக)

துண்டம் 1 துண்டி-.

1. Piece, fragment, bit, slice; துண்டு. (பிங்.) மதித்துண்ட மேவுஞ் சுடர்த்தொல்சடை (தேவா. 79, 3)
2. A small piece of cloth; சிறு துணி
3. Small channel; சிறு வாய்க்கால்
4. Section; division, compartment; பிரிவு
5. A small plot of field; சிறிய வயற்பகுதி
6. A piece of fish-meat; மீன்துண்டம்

துண்டம் 2

1. Beak, bill; பறவைமூக்கு. துண்டப்படையால் (கம்பரா சடாயுவுயிர்.109).
2. Nose; மூக்கு. தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி (கல்லா. 63, 8)
3. Face; முகம்
4. Elephant's trunk; யானைத்துதிக்கை
5. Blade as of a sword; ஆயுதவலகு
6. Rat snake; சாரைப்பாம்பு

முண்டம் 1

1. Head; தலை, முண்டம் வெம்ப (திருவாலவா. 44, 31).
2. Forehead; நெற்றி. முண்டத்துற்ற கண்ணெரியினான் (இரகு. தேனுவ. 86)
3. ச்லேஅன் shaven head; மழித்த தலை. சடையு முண்டமுஞ்சிகையும் (அரிச். பு. விவாக. 2)
4. Bald head; வழுக்கைத்தலை
5. Skull; கபாலம். இறையான் கையினிறையாத முண்டந் நிறைத்த வெந்தை (திவ். பெரியதி. 5, 1, 8)
6. Headless trunk; உடற்குறை. (யாழ். அக)
7. Limbless body; உறுப்புக்குறை. கை முண்டம், கால் முண்டம்.
8. Undeveloped fetus; நிரம்பாக் கருப்பிண்டம். முண்டம் விழுந்தது
9. Naked body; நிர்வாணமான உடல்
10. Useless person; blockhead; அறிவில்லாதவன்
11. Sphere, globe; திரட்சி
12. Stump, stake; குற்றி.
13. Iron dross. See மண்டூரம். (அக. நி)
14. முண்டகம், 3 (யாழ். அக)
15. See முண்டபங்கி. நலத்த வுருவது காண்டல் முண்டம் (தத்துவப். 64)
16. Caste mark on the forehead; புண்டரம். ஆட்கொண்டான்றிரு முண்டந் தீட்டமாட்டாது (திருவாச. 35, 9)
17. A preparation of rice-flour cooked in steam; பிட்டு (அக. நி)
18. Ankle; கணுக்காற் பொருத்து.
19. Piece, as of timber; மரத்துண்டு
20. Mass; கட்டி. பேராறு பெருகிவர பீமுண்டம் மிதந்துவர

முண்டம் 2
A single card of a suit, in the hands of a player; சீட்டாட்டத்தில் ஒருவர் கையிலுள்ள ஒரு சாதியைச் சார்ந்த ஒற்றைச்சீட்டு.

பண்டம் 1
1. Substance, article, store, provision; பொருள். அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் (குறள், 475).
2. Materials; utensils; பாத்திரம் முதலியன
3. Cake; பணியாரம். (பிங்)
4. Profit, advantage; பயன். பாதம் பணிவார்கள்பெறு பண்டம்மது பணியாய் (தேவா.1001, 5)
5. Gold; பொன். (பிங்)
6. Wealth; riches; நிதி. நீதியான பண்டமாம் பரமசோதி (திவ். திருக்குறுந்.11)
7. Cattle; ஆடுமாடுகள்.
8. Truth, certainty; உண்மை. பரலோகத்திருப்பது பண்டமன்றே (தேவா. 187, 10)

பண்டம் 2
1. Belly; வயிறு.
2. Body; உடல்.

பண்டம் 3
Fruit; பழம். ஒல்குதீம் பண்டம் பெய்தொழுகும் பண்டியும் (சீவக. 62).

தண்டம் 1
1. Cane, staff, rod, walking-stick; கோல். தண்டங் கமண்டலங் கொண்டு
2. Club, bludgeon, a weapon; தண்டாயுதம். (சூடா.) தண்டமுடைத் தருமன் (தேவா.1055, 6)
3. Handle of an umbrella or parasol; குடைக்காம்பு. (சூடா)
4. Pestle; உலக்கை. தண்ட மிடித்த பராகம். (தைலவ.தைல.56)
5. Oar; படகுத்துடுப்பு.
6. Churning rod; மத்து
7. Pole, as a linear measure = the height of a man = 4 cubits = 2 taṉu; ஆளொன்றின் உயரமாய் நான்கு முழங்கொண்ட ஓரு நீட்டலளவை. தனுவிரண் டதுவோர் தண்டம் (கந்தபு. அண்டகோ. 6)
8. Body ; உடம்பு. நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு (தேவா. 1107, 3)
9. Army; படை
10. Array of troops in column; படைவகுப்பு வகை.
11.Crowd; திரள்.
12. Punishment, சதுர் விதோபாயங்களுன் ஓன்றாகிய ஓறுத்தடக்குகை. (சீவக. 747, உரை)
13. Punishment, penalty; தண்டனை. தண்டமுந் தணிதி பண்டையிற் பெரிதே (புறநா. 10, 6)
14. Impost, tax; வரி.
15. Treasury; கருவூலம்.
16. Loss; useless expense; அனாவசியமாய் ஏற்படும் நஷ்டம். அவன் செலவழித்தது தண்டமாய்ப் போய்விட்டது.
17. Obeisance, adoration, prostration; வணக்கம். தண்டமிட்டுச்செய்த விண்ணப்பம்.
18. Elephant's stable; யானை கட்டும் இடம்.
19. Elephant's track or way ; யானை செல்வழி. (திவா) வனகரி தண்டத்தைத் தடவி (கம்பரா. வரைக்காட்சி. 5)
20. Nāḻikai, a unit time; cf. தண்டதாமிரி. ஓரு நாழிகை நேரம்.

தண்டம் 2
1. Kingly justice; செங்கோல். (சுக்கிரநீதி, 22.)
2. Fine; அபராதம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-17, 12:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 226

மேலே