காத்திரு மனமே
காத்திரு மனமே இன்றைய உன் நிலை நாளை மாறும்
நீ கண்ணீர் சிந்தி வாடி நின்றால் தவிப்பது உன் உறவல்லவோ
உன் இன்றைய சோதனை என்பது வாழ்க்கை படியில் ஒரு பரீட்சை
இதை கடந்து பாரு நாளை மலரும் இனிமை சுகங்கள்
மானுட வாழ்க்கையிலே தடைகளையும் துன்பங்களையும் கடக்கும் போதே
அவை நமக்கு வாழ்க்கையை கற்று தருகின்றன
ஆதலால் நீ கலங்காதே நாளை மாறும் உன் நிலைமை
காத்துஇருப்பவன்
வாழ்வில் புயல் மையம் கொண்டாலும் பாதிப்பு இன்றி கடந்து செல்வான்
புயல் மையம் கொள்ளும் தருணம் பொறுமை இன்றி
உன் மனம் அலை பாயும் எனின் இழப்புகள் உன் வசமமாகும்
உன்னுடன் வந்த சோகம் நாளை மாறும் பொறுமை கைக்கொள்
நாளை விடியும் உன் வாழ்வில் புன்னகை