நற்கர்மங்களைத் தியாகம் செய்தலாகாது

நான் யாரையும் வற்புறுத்துவதில்லை எனது கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென..

எத்தனையோ நூல்களைப் படித்தாலும் அவற்றின் விளக்கங்கள் புரிந்தாலும் அவற்றின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை..

சோம்பேறியான வாழ்க்கை,
பிச்சையெடுத்து வாழ்தலென்று அறியாது அதுவே இறைபக்தியென்றும் இறைவனை அடையும் மார்க்கமென்றும் பிறர் உழைப்பில் ஊனுடல் வளர்க்கும் மடையர்களால் இவ்வுலகைப் பீடித்துள்ள சந்நியாசமெனப்படும் பெரும் நோய் உண்மையில் சந்நியாசமெனப்படாது..

நான் உணர்ந்ததில் இருந்து, சுயநலமில்லாமல் உலகிற்காக வாழ்வையும், உழைப்பையும் அர்ப்பணிப்பது சந்நியாசமென்றேன்...
பலருக்கு என் மேல் வெறுப்பு உண்டாயிற்று இதனால்...

நான் மகான் அல்ல.
ஆனால், எனது மனச்சாட்சி இன்னும் விழிப்பு நிலையில் தான் உள்ளது...
அது என்னிடம், " எல்லா உயிர்களிடத்திலும் காணப்படும் இறைவனை அறிந்து அவனுககுத் தொண்டாற்றாமல் சுயநலத்தோடு கண்டபடி வாழ்ந்து எதையும் செய்வேனென்ற அகங்காரம் கொண்டு, வாழ்வது உண்மையில் எப்படி பக்தியாகும்? ", என்று..

உண்பதை, பிச்சையெடுப்பதை, மலம்,ஜலம் கழிப்பதை, துயில் கொள்வதை மட்டும் செய்வதென மிருகத்தின் வாழ்வை ஒத்த வாழ்வை வாழ்வதென்பது கடவுளை அடைவதற்கான வழியாகாது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Jun-17, 9:03 am)
பார்வை : 162

மேலே