மனிதன் ஆணவம்
சந்தனமும் அகிலும்
மர கட்டைகளே
இவை எரித்தால்
தருவதோ நறுமணம்
தெய்வமணம் வான்
முட்டி நிரம்பும்
அரு மணம்
ஆனால் இந்த கட்டை
மானிட கட்டை
மண்ணில் சாய்ந்திட
எரித்தால் தருவது
தொல்லை தரும்
துர் நாற்றம் -இது ஏன்
என்றால் அவனோடு
கடைசிவரை தங்கிவிடும்
அவன் அடங்கா ஆணவம்
எரித்தால் தரும்
துர் நாற்றம்
அகிலும் சந்தனமும்
எரித்தால் தரும்
நறு மணம்
இறை மணம்