சிந்தையில் தந்தை

முப்பாட்டன் அணுவில் நீ தோன்றி
எம்பாட்டன் மூன்றாம் தளமுறையாய்
எனை ஈன்றவனே எங்கே சென்றாயோ ?
இவனை ஏக்கம் கொள்ள செய்து
இங்கனம் எங்கே சென்றாயோ !???.......

மண்ணில் பட்ட இவன் பாதத்தை உந்தன்
நெஞ்சில் சுமக்க தவம் செய்தாயே !
இவன் செய்த பாவம் என்னவோ உந்தன்
நெஞ்சம் அனைத்து நீங்கா நிலையிலந்ததேனோ !!

வரிபுலியென உந்தன் புறமுது கேற்றி
இறைமுருக னென்று அகமகிழ் தருணம்
மறைந்து போன மாயம் என்ன ?

கரம்பற்றி காடுமே டென திரிந்தந்த
தடம் மறைந்த காலமென்ன காரிருளாய்
மாறிபோன இவன் வாழ்வின் மாயமென !???....

சிரம்தாழா நிலைதனில் இவன்கரம் பற்றி
காவடி கொண்ட காலம் இன்று விழிகள்
பற்றற்று பறிபோவதன் சூழ்ச்சி என்ன !?????

மாரிக்கும் பதுங்கா உந்தன் பாதங்கள் -அன்று
பாடசாலை நோக்கியதன் ஏக்கமென்ன

..........
..........

இன்றுவரை இவனது பாதச்சுவடுகளை
தேடி அலைகிறேன் அடிமேல் அடிவைத்தே
உந்தன் சுவடுகளிலே வாழ்ந்த காலங்களில் !.....

விண்ணுலகில் வீற்றிருக்கும் எம்தந்தையே
இவன் மட்டும் எவ்வாறு உனை இழந்தும்
மண்ணுலகில் நடமாடுகிறான் என அறிவாயோ
நீ பிரிந்த இந்நாளில் நடைபிணமாக !!!??????.......


********************தஞ்சை குணா**************

எழுதியவர் : தஞ்சை குணா (17-Jun-17, 8:55 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : sinthaiyil thanthai
பார்வை : 114

மேலே