பணம்

பணம்..
கானல் நீர்..
உழைக்க தவறிய
தருணங்களில்...

பணமும்
கடமை தவறாது
கடமையைச் செய்கிறது...

‘அந்த’ குறிப்பிட்ட பணத்தை
சம்பாரிக்கும் வரைதான்
அவர்கள் பேச்சைக் கேட்கும்
பணம்...
குறிக்கோளை தொட்டுவிட்டால்
பணத்திற்கும் பணத்தாசை
பிடித்துக் கொள்கிறது...
‘அதன்’ போக்கில்
அவர்கள்...

தாமரை இலையில்
ஓட்டா நீரைப்போல
ஒட்டுவதில்லை..
நம் கைகளில்..
‘அந்த’ பணமும்...

குளத்து நீரை
கைகளில் அள்ளிக்கொண்டு இருக்கின்றேன்..
சிலர் குண்டாவிலும்...
சிலர் அண்டாவிலும்...
இன்னும் சிலர்..
அமைதியாய்..
ஆரவாரமே யில்லாமல்..
குழாய்ப் போட்டும் உறுஞ்சுகிறார்கள்..

கற்ற வித்தை
கை கொடுக்கிறது போல
அவர்களுக்கு...

எப்படி கத்தினாலும்
வித்தையை கற்கமுடியவில்லை
நமக்கு...

ஓட்டைக்கைகளில்
ஒழிகிக்கொண்டு
ஓடிவிடுகிறது பணம்...

மனத்தை நேசியுங்கள்
பணத்தை அல்ல..
என்பவர்களுக்கு...
பணம் இருந்தால் தானே
மனிதனே தெரிகிறான்..
தெரியாத மனம்..
எப்படித் தெரியும்..?

தத்துவம்
பேசுபவர்களுக்கு
தரித்திரம் எப்படிப் புரியும்..?

சகலத்தையும் துறந்திருக்கும்
சன்யாசி கூட...
சாண் வயிற்றையும் தாண்டி
பணத்தை தேடும் போது...
சராசரி சம்சாரிகள்
சகல வித்தைகள் தெரியாவிட்டாலும்
சலிக்காமல் தேடிக்கொண்டிருக்கிறோம்...

************
சிகுவரா
21/6/2017

எழுதியவர் : சிகுவரா (23-Jun-17, 9:20 pm)
சேர்த்தது : சிகுவரா
Tanglish : panam
பார்வை : 260

மேலே