பள்ளி பருவம்

''பள்ளி பருவம் ''
பள்ளி பருவம்
அது ஓர் பவழம் ...!
நம்மை பற்றி
நாம் அறியும்முன்பே
நட்பை பற்றி அறிந்தோம் ....
இனம் கண்டறியும் முன்பே
கனம் ஒருமுறை
மனம் பரிமாறிய காலமது ....
காதலின் விளக்கம்
கணிக்கும் முன்பே
கரையேறினோம்
நட்பெனும் அக்கரைக்கு ....
ஆண் பெண் என
பாலினம் பிரிக்கும் முன்பே
படிப்பை முடித்தோம் ....
இல்லையேல் ..?...!
நட்பு முறிந்திருக்கும்
கலாச்சாரம் எனும்
களத்தில்....!
உனக்கு நான் சமம்
எனக்கு நீ சமம்
என்பதெல்லாம்
தேர்வறையில் மதிப்பெண்கள்
மட்டுமல்லாது ....
திருட்டு மாங்காய் தின்பதிலும்
புலி போல் புளியமரம் ஏறும்போதும்
நரிபோல் நாவல்மரம் ஏறும்போதும்,
மாட்டிக்கொண்டால்
சிங்கமாய் சிணுங்குவதிலும்
பூனைப்போல் பதுங்குவதிலும்
இருக்கிறது,
நம் இருவருக்கும்
சமமான நடிப்பு நாடகம் ...!
உடன் படிக்கும் தோழமைகளிலிருந்து,
பழகும் ஆசிரியர்கள்வரை
தெரியவில்லை ...?
நம் நட்பு காதலின் ஆழமல்ல
கடலின் ஆழ்மனது என்று ...!
காதல் தான் என
முத்திரை குத்தினாலும்
அக்குறைகளையும்
பொருட்படுத்தாது
குதித்து குதித்து
கும்மியடித்த காலமது ...!
திசைகள் எட்டு என்பது
நாமெல்லாம் ஏழ்திசையில்
பிரிந்தபோது தான்
ஆராமறிவுக்கு அறிந்தது..
காலத்தின் மாற்றத்தால்
பல கசப்புகள் கசிந்தாலும்
என்றும் கரையாது
நம் நட்பு ......!!
ஆருயிராய் பழகி
அடுத்தநொடியில் அறுத்து கொள்வது
இன்றைய நட்பு ..!
தொப்புள் கோடியில் தோன்றி
தாய் மடியில் தவந்து
அடுத்த பிறவிக்கு விடைபெறும்வரை
வரிசை கட்டிய எறும்பு போன்றது
நம் நட்பு ..!
இன்றும் ....!!
இன்றும் இனிக்கும்
அந்த நினைவுகள்
திருட்டு மாங்காய் போல ...!
சமுதாய சூழலால்
சந்திக்க முடியவில்லை என்றாலும்
சிந்திக்கிறேன் ..? இன்றும் ..!
சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் ...!
இரு புருவங்களாய்
விலகியே இருந்தாலும்
எதிலாவது ..? எங்காவது ..?
எதார்த்தமாய் பாத்துக்கொள்ள
மாட்டோமா ..?..! என
ஏங்கினாலும் ....
உனக்கான உலகம்
உருவாகிருக்குமென்ற
உள்ளுணர்வோடு
உரையாடிக்கொள்கிறேன்
உன் நினைவுகளோடு ...!
திருமணமேடை ஏதும் முன்
மறவாமல் மனஓலை
அனுப்பிவிடு ....
அந்தமனிலே இருந்தாலும்
அழைப்பு வந்த
அடுத்த கனம்
அங்கு இருப்பேன் .. என்
அன்பை பரிமாற ....!!
பெண் என்பதால் கோழையல்ல..(?)
உன் நட்பை
உலகிற்கு உரையாற்ற ....
பாதியில் வந்த
பந்தங்களிடமும்
பயந்தததில்லை ..! நம்
நட்பின் பயணத்தை
பரிமாற ...!
காத்திருப்பேன் நம்
சொந்தபந்தங்களையும்
பரிமாற்ற..!
சம்பந்தி என்ற பெயரில் ..!!
கண்ணில் கற்பனை காட்சிகளோடு
காத்திருக்கிறேன் ..
மீண்டும் ஓர்நட்பு
வட்டம் தொடர ..!
நாம் மட்டுமல்லாது
நம் சொந்தங்களோடும் சேர்ந்து
நட்பெனும் நவரசத்தை ருசிக்க ...!!!
வினோ . வி ........!