காதல்

நீ கிழித்தெறிந்தக் காதல் கவிதைகள்
கவலைக்கிடமாக உள்ளதடி!
நீ உதறிச் சென்ற
கைகளும் உன் பெயரைக் கிறுக்குதடி!
நீ தூக்கி எறிந்தப் பூக்கள் எல்லாம் என் அறையில்
அழுகுதடி!
நீ ஏசிப் பேசிய வார்த்தையெல்லாம் உன்
பெருமை சொல்லுதடி!
நீ விலகிச்சென்ற தூரமும் உன் நினைவைக் கூட்டுதடி!
நியுட்டனின் விதியாய் என் விதி!
நீ தூக்கி எறிந்தாலும் உன்னையே மீண்டும் மீண்டும் என் கண்களும் தேடுதடி.......
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (3-Jul-17, 12:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 311

மேலே