தடை போடு

உடல் மொழி பேசும் காமம் இல்லா
உணர்வுகள் மட்டும் பேசும் காதலுக்காக காத்துக்கொண்டிருக்கும் காதலா..,
உன் காத்திருப்பு தான் அவளுக்கு தெரியுமா...?

மூடப்பட்ட சிற்பி திறக்கப்பட்டாலே
முத்தொன்று பிறக்கும்...!
அலமாரியில் அடுக்கப்பட்ட புத்தகங்கள் ..,
அலங்கரிங்கபடுவதால் உபயோகமில்லை...!
அடே காதலா உன் உணர்வோடு கலந்தவளை உனக்கே உரியவளாக்க வேண்டாமா...?

மனச்சிறையில் அழுத்தத்தோடு அழுத்தமாக புழுவைப்போல் நசுங்காதே..!

அந்த பூங்காற்றிடம் பூங்கொத்தை கொடுத்து விடு...!

இன்னும் எத்தனை இரவுகள் தான்..
அந்த நீலக்கடலின் தோன்றும் மதியிடம் காலம் கழிப்பாய்..?

உன்னவளை உன்னருகில் நீ
வைத்திட வேண்டாவா..?

மையிருட்டு படரும் போதும் - அவள்
மையிட்ட விழிகள் போதும் ..
உனக்கு வழி காட்ட...!

எதை எதையோ தடை செய்கிறார்கள்-நீ
உன் தயக்கத்திற்கு தடை போடு..!

எழுதியவர் : மோகன் சிவா (3-Jul-17, 12:16 am)
சேர்த்தது : மோகன் சிவா
Tanglish : thadai podu
பார்வை : 115

மேலே