சிக்குசா - மித்தாலி

பாட்டிம்மா நல்லா இருக்கறீங்களா?
😊😊😊😊😊
இது யாரடி? அடடே, முல்லையா? நீ எப்படி வடக்க இருந்து வந்த?
😊😊😊😊😊
போன வாரமே வந்துட்டோம். உங்க வீட்டுப் பக்கம் வர நேரங் கெடைக்காம போயிருச்சுங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
உன் வீட்டுக்காரன் பழனிமுத்து நல்லா இருக்கானா? உம் பிள்ளைங்க நல்லா இருக்காங்காளா? அவுங்க பேரு என்னவோ சொன்ன. எனக்கு மறந்து போச்சுடி முல்லை.
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, எம் பையம் பேரு சிக்ஷா, பொண்ணு பேரு மிதாலி.
😊😊😊😊😊
என்னடி முல்லை சிக்குசா, மொத்தாலின்னெல்லாமா பேரு வைக்கறது?
😊😊😊😊😊
பாட்டிம்மா தமிழ் நாட்டில இருக்கற தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், மொத்தத்திலே கற்ற தமிழர்கள்ல 98% பேர் அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்க விரும்பாம இந்திப் பேருங்களத்தான் விரும்பி வைக்கறாங்க. ஊடகங்கள் வேற தமிழைச் சீரழிக்கறாங்க. இதத் தட்டிக்கேக்க எந்த அரசியல் கட்சிக்கும் அக்கறையில்ல. தமிழ் அமைப்புகளுக்கும் துப்பில்லை. வடக்க வேலைல இருக்கற நாங்க என்ன செய்யறது?
😊😊😊😊
சரி..சரி. தாய் மொழிய மதிக்காதது வீட்டுச் சாப்பாட்டுக்குப் பதிலா சாலையோரம் விக்கற உணவுப் பண்டங்கள வாங்கிச் சாப்படறதுக்கு
சமம்டி.. அது கெடக்குது விடு. தமிழ சீரழிக்கறதே நம்ம தமிழர்கள் தான். சரி, உம் பிள்ளைங்க பேருக்கான அர்த்தங்களச் சொல்லுடி.
😊😊😊😊😊
பாட்டிம்மா, பையம் பேரு சிக்ஷா - சிக்ஷா - ன்னா 'கல்வி' - பொண்ணு பேரு மிதாலி . மிதாலி-ன்னா 'நட்பு' -ன்னு அர்த்தம் பாட்டிம்மா.
😊😊😊😊😊
ஏண்டி முல்லை அந்த இந்திப் பேருங்கள வச்சு உம் பிள்ளைங்களையும் நம்ம தாய் மொழியையும் கேவலப்படுத்தறது சரியாடீ. இந்திக்காரங்க உங்கள மாதிரி தமிழப் பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வைப்பாங்களா? அவுங்களுக்கு இருக்கற தன்மானம் மொழிப் பற்று நமக்கில்லையே.
😊😊😊😊😊
எங்களுக்கும் சங்கடமாத்தான் இருக்குதுங்க பாட்டிம்மா. அடுத்த வருசம் என் கணவர் விருப்ப ஓய்வு பெற்று தமிழ் நாட்டுக்கு வந்து தொழில் தொடங்கி நூறு பேருக்காவது வேலை போட்டுத்தரணும்னு ஆர்வமா இருக்காரு. இங்க வந்த ஒடனே மொதல் வேலையா பையன் பேர 'கல்வி'ன்னும் பொண்ணுப் பேர 'நட்பு'- ன்னும் சட்டப்படி மாத்தப் போறாம்.
😊😊😊😊
இப்பத்தாண்டி முல்லை நீ தமிழச்சி.
😊😊😊😊
ரொம்ப நன்றிங்க பாட்டிம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழ் உணர்வைத் தட்டி எழுப்ப.
##########$$##$$$$$#$$$$$########## Shiksha=instruction,learning,lesson,study of skill
Mithali=friendship

எழுதியவர் : மலர் (3-Jul-17, 1:15 am)
பார்வை : 147

மேலே