இவன் தந்திரன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா இரவி எழுத்து இயக்கம் R கண்ணன் நடிப்பு கெளதம் கார்த்திக் RJ,பாலாஜி ,
இவன் தந்திரன் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
எழுத்து இயக்கம் R. கண்ணன் .
நடிப்பு கெளதம் கார்த்திக் R.J.,பாலாஜி ,
இசை S.S,தமன்
.இயக்குனர் கண்ணன் அவர்களுக்கு முதல் பாராட்டு .கதாநாயகன் கெளதம் கார்த்திக்கிற்கு இரண்டாவது பாராட்டு .அப்பா கார்த்திக் சாயல் இன்றி தனித்துவமாக நடித்துள்ளார் .புதிய வரவான கதாநாயகியும் நன்றாக நடித்து உள்ளார்
நாட்டுநடப்பை படம் பிடித்து காட்டி உள்ளார் .பல லட்சம் செலவு செய்து பொறியியல் பட்டம் படித்து விட்டு மாதம் 10,000 ஊதியத்திற்கு சிரமப்படும் பொறியாளர்களின் நிலையை எடுத்து இயம்பி உள்ளார். வசனம் மிக நன்று .
பொறியியல் படிப்பை பாதியில் விட்ட கெளதம் கார்த்திக் R.J.,பாலாஜி இருவரும் நண்பர்கள் .சொந்தமாக கைப்பேசி தயாரிக்கின்றனர். கைப்பேசி பழுதானால் தூக்கி எரியாமல் .பழுதான பாகத்தை மட்டும் மாற்றி விட்டு பயன்படுத்தும் விதமாக தயாரிக்கின்றனர் .அதனை சந்தைப்படுத்த நிறுவனம் தேடி அலைகின்றனர்.
கதாநாயகிக்கு மடிக்கணனி விற்கிறார் கெளதம் கார்த்திக்.அதனை கீழே போட்டு உடைத்து விட்டு பணத்தைத் திருப்பிக் கொடு என்று சண்டையிடுகின்றார் .மயில்சாமியிடம் பஞ்சாயத்தும் வைக்கிறார். நல்ல நகைசுவை .R.J.,பாலாஜி யின் குறுக்கு வசனங்கள் வெடி சிரிப்பு.
கெளதம் கார்த்திக் R.J.,பாலாஜி இருவரும் மத்திய அமைச்சர் வீட்டில் கேமிரா மாட்டும் பனி செய்கின்றனர் .அதற்குரிய கட்டணம் 23000 தர மறுக்கின்றனர் .அலைய விடுகின்றனர் .கோபமாக கேட்டதும் அமைச்சர் மைத்துனர், கெளதம் கார்த்திக்கின் இரு சக்கர வண்டியையும் தூக்கி வைத்துக் கொண்டு ,காணவில்லை போ என்கின்றனர் .
பணம் கேட்க வந்துபோகும் போது அமைச்சரின் உள்ள அறிகிறான். அமைச்சர் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் போதிய வசதிகள் இல்லை என்று மூடி விட ஆணையிடுகிறார் .அவர்கள் வந்து அமைச்சரைக் கவனித்ததும் கல்லூரிகளைத் திறக்க ஆணையிடுகிறார்.
கல்லூரி திறந்ததும் அமைச்சரை கவனித்த செலவை ஈடு கட்ட மாணவர்களிடம் 25,000 கட்டினால்தான் பரீட்சை எழுதமுடியும் என்று மிரட்டுகின்றனர் .
ஒரு ஏழை மாணவன் அப்பாவிடம் 25,000 பணம் கேட்கிறான் .அப்பா திடீரென இவ்வளவு பணம் எப்படி தர முடியும் என்கிறார் .அவன் மனம் வெறுத்து தொடர்வண்டி மேல் ஏறி மின்சார வயரைப் பிடித்து தற்கொலை செய்து கரிக்கட்டையாகிறான் .கதாநாயகியுடன் படிக்கும் வகுப்புத் தோழன் .இந்த தற்கொலை கெளதம் கார்த்திக் கண் முன்னே நடக்கின்றது .தடுக்க முயன்றும் முடியவில்லை .இக்காட்சியைப் பார்க்கும் அனைவரின் கண்களும் கலங்கி விடுகின்றனர் .
கெளதம் கார்த்திக் க தாநாயகிக்கு கல்லுரியில் பணம் கட்டும்போது ஒரு நூறு ரூபாயில் சிறிய கருவி ஒன்றைப் பொருத்தி தந்து விடுகிறான் .பின் பணம் போகும் அமைச்சர் வீடுவரை கண்டுபிடித்து, சிறிய கேமிராவால் படம் பிடித்து ,சமூக வலைத் தளங்களில் பரவ விட்டு ,அமைச்சரின் பதவிக்கு ஆப்பு வைக்கிறான் .முன்னாள் அமைச்சரானவருக்கும் கெளதம் கார்த்திக் நடக்கும் யுத்ததத்தில் யார் வென்றார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . பாடல் பின்னணி இசை நன்று
தொழில் நுட்ப பொறியாளர்கள் படம் பாட்டையும் வசனத்தில் நன்கு உணர்த்தி உள்ளனர் .இளைய தலைமுறையினரின் இன்னலை விளக்கும் படம் .சமூக வலைத் தளங்களின் மூலம் பல்வேறு ஊழல்கள் வெளிப்பட்டு வருவதை கதையாக்கி உள்ளார் .தனியார் பொறியியல் கல்லூரி நடத்துபவர்கள் அமைச்சர்களை கவனிப்பதற்காக படிக்கும் மாணவர்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் அவலத்தை தோல் உரித்துக் காட்டி உள்ளார் .
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்தப்படம் ஒரு பாடம். இயக்குனருக்கு பாராட்டுக்கள் .