காடுகளும் யானைகளும்
[] காடுகளும் யானைகளும் ...
---------------------------------------------------------------------
காட்டு யானைகளை பற்றியோ
ஆனை காடுகளை பற்றியோ
வரிகள் இங்கே தனிதனியே
வரிசைபடுத்தபடவில்லை ..
கடைசி வரையும் -
கலந்தே இருக்கும்
காடும் யானையும்
யானையும் காடுமாக !
நீர் நிலைகள் நிறைந்த
அந்த காட்டுக்குள்ளே
நீந்தி கொண்டிருந்தது
ஒரு யானை ..
காட்டின் சார்பாக
அந்த யானையிடம்
பேசிக்கொண்டிருக்கிறேன் நான் !
ஆனையே -
மீனும் நீயும் ஒன்று தான்
உன் மிதக்கும் கால்கள் சொல்கிறது !
உன்னால் -
தானும் நீந்த வேண்டுமென்று
தரையில் காடும் தவிக்கிறது !
காடு தவிக்க
காரணம் உண்டு ..
இலை அசைத்து காடும்
செவி அசைத்து நீயும்
உயிர் காத்து கொண்டீர்கள்
அசைவினில் ஒன்றாக !
தூரல் அழைத்து வந்து காடும்
துதிக்கையில் ஆசி தந்து நீயும்
மனிதனை கண்டீர்கள்
அடையாளம் நன்றாக !
அடர்ந்த காடும்
ஆனையின் சரும மேடும்
பெருமைகள் பல கொண்ட
கருமையின் நிறமே பாடும் !
நீங்கள் -
கோபம் கொண்டு வந்தால்
எதிரில் எதுவும் இல்லை
எல்லாம் ஓடும் !
பெருங்காட்டிற்க்கு ஏற்ற
விலங்கினம் நீ தான் ..
உன் -
பெரும் உருவம் தூங்க
விசால இடம் காடு தான் !
இத்தனையுமான நட்பு
இருவருக்குள்ளும் இருக்கையிலே
நீ தனியாக நீந்த கண்டால்
தவிக்காமல் என்ன செய்யும் காடு !
உறையை நான் முடிப்பதற்குள்
கரையை சேர்ந்த களிறு
தரையை எட்டி கிளையை முட்டி
மரத்தின் -
இலையை சேர்த்தது நீரோடு !
காடு நிரம்பும் கனமழை பெய்ய
கடவுளை கேட்கிறேன்
அதுவரை இந்த
இலை வழி நீந்த
உங்களை கேட்கிறேன் ..
யாசித்தது யானை காட்டிடம் ..!
ஊடல் தீரந்த காதலராய்
களிறும் காடும் எனை மறக்க ..
நகர்ந்தேன் நான் வேறிடம் !
கண்டுகொள்ளாமல்
கழட்டி விட்ட போதும்
கடும் கோபத்திற்கு பதிலாக
கவிதையே வருகிறது
அவர்களை பற்றி நினைக்கையில் ..
காடுகள் -
யானைகள் இரசிக்கும்
அசையும் சிலைகள் !
யானைகள் -
காடுகள் இரசிக்கும்
அசைவ மலைகள் !
யாழ் ..

